தனுஷ் கால்ஷீட் விவகாரம்: ஆர்.கே.செல்வமணிக்கு பதில் அறிக்கை வெளியிட்ட Fivestar நிறுவனம்
ஆர்.கே.செல்வமணி அறிக்கைக்கு எதிராக 5 ஸ்டார் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தங்களுடைய படத்தில் நடிப்பதாக சொல்லி முன் பணம் வாங்கிவிட்டு இதுவரை படப்பிடிப்புக்கு கால்ஷீட் கூட அளிக்காமல் இருக்கிறார் என்று பைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் (fefsi) ஆர்.கே செல்வமணி கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை அடுத்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னை போல் நன்மை செய்தவர்கள் யாருமே இருக்க முடியாது.
எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்து கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசுக்கும் எனக்கும் பிரச்சனை ஏற்படுத்தும் முயற்சிகள் எல்லாம் செய்து பொய்யான குற்றசாட்டுகளை முன் வைத்தனர். அதனால் தான் இங்கு பேச வேண்டிய அவசியம் வந்தது. நான் இன்றும் படம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுய ஒழுக்கத்தில் என்னை விட சிறந்தவன் எவனும் இல்லை. என்னுடைய சினிமா, குடும்பம், பதவி என்று அனைத்தையும் விட என்னுடைய சுயமரியாதை தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார். பின் இந்த விவகாரம் தொடர்பாக பைவ் ஸ்டார் நிறுவனத்திற்கு எதிராக ஆர்.கே. செல்வமணி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார்.
தனுஷ் பட விவகாரம்:
அதில் அவர், 30.9.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாங்கள் திரு.தனுஷ் அவர்களிடம் Call sheet கேட்டு நீங்கள் புகார் அளிக்கவில்லை. சில வருடங்களுக்கு முன்னால் நீங்கள் தனுசுக்கு 3 கோடி அட்வான்ஸ் கொடுத்ததாகவும், அதை இப்போது அவர் 16 கோடியாக திருப்பித் தர வேண்டும் என்றும் தான் நீங்களும் உங்களுடைய கணவரும் புகார் அளித்திருந்தீர்கள். 3 கோடி அட்வான்ஸ் கொடுத்துவிட்டு 16 கோடி கேட்பது நியாயமே கிடையாது என்று நடிகர் சங்கத்தின் சார்பில் கூறி இருந்தார்கள். நாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துள்ளோம். அதனால் தான் வட்டி எல்லாம் சேர்த்து 16 கோடி ரூபாய் என்று நீங்கள் சொன்னீர்கள்.
https://www.youtube.com/watch?v=nd6LoZyiZhI
ஆர்.கே.செல்வமணி ஆதங்கம்:
அதற்கு நடிகர் சங்கம், நாங்கள் வட்டிக்கடை நடத்தவில்லை. சங்கம் நடத்துகிறோம். இது சரி கிடையாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
உங்களுடைய கணவர் எடுத்து கூறி மூன்று கோடிக்கு மேல ஒரு தொகையை பெற்று தருமாறு வேண்டுகோள் வைத்தார். நடிகர் சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்டவரிடம் ஆலோசனை செய்து மூன்று கோடிக்கு இரண்டு மடங்கு ஆறு கோடி ரூபாய் வாங்கி தருவதாக சொன்னார்கள். அதில் 5 ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை. கதிரேசன் அவர்கள் என்னுடைய நெடுநாள் நண்பர், தனுஷ் அவர்கள் என்னுடைய நண்பரின் மகன் என்பதாலும் தனிப்பட்ட முறையிலும் இதற்கு மேல் ஏதாவது பெற்று தர முடியுமா என்று முயற்சிக்கிறேன் என்று சொன்னேன். புதிய பிரச்சினை உருவாக்க திரு. மோடி முதல் திர. ட்ரம்பு வரை மேலிடத்து உத்தரவு என்று நீங்கள் யாரையாவது கொண்டு வர முயற்சிக்கலாம்.
ஆர்.கே.செல்வமணி அறிக்கை:
இப்படி பிரச்சனை இருக்கும்போது ஏதோ மேல் இடத்து உத்தரவு என்று புதிய அரசியலை புகுத்த முயற்சித்துள்ளீர்கள். திரைப்பட சங்கங்களில் ஏற்கனவே பல அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. நீங்களும் உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள். நாங்கள் அக்டோபர் 30க்குள் ஒரு நல்ல நியாயம் பெற்று தருவோம் என்று உறுதியளித்தோம். இது தொடர்பாக பேசிக் கொண்டுதான் வருகிறோம். கடைசியாக தனுஷ் அவர்கள், அண்ணா இந்த தொகை நியாயம் இல்லை. இருந்தாலும் உங்களுக்காகவும், தயாரிப்பாளர் சங்க வேண்டுகோளுக்காக மட்டுமே தருகிறேன். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூட என்னால் கொடுக்க முடியாது. இல்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னதாக கூறியிருக்கிறார்.
5 ஸ்டார் நிறுவனம் அறிக்கை:
நடிகர் சங்க உறுப்பினர்கள் வட்டிக்கு கடன் வாங்க அதற்கென வேறு அமைப்புகள் உள்ள போது தயாரிப்பாளர்களை ஏன் நாடவேண்டும். தாங்கள் கூறுவது போல் கடன் பெற்றவர்களிடம் நான் கூற முடியாது, வந்து நடித்து தருமாறு தங்கள் நண்பர் திரு.கதிரேசன் முதலில் வேண்டுகோள் வைத்து மன்றாடி நின்றது அனைவரும் மறந்துவிட்டீர்களா? பெற்ற முன் பணத்திற்கு நடித்து தருவதே நியாயம் என்று எந்த சங்கத் தலைமைகளுக்கும் தெரியவில்லையா? நடிகர் திரு.தனுஷ் அவர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுக்கு Five Star Creations மட்டும் முதல் காரணம் அல்ல என்று தங்களுக்குத் தெரியாதா? என்ன நடந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெரியவரும். புதிய அரசியலைப் புகுத்தும் நோக்கம் என்னுடையது அல்ல. எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கவே சபையில் நடந்ததைச் கூறினேன். சகோதரி என்று தொடங்கிய தங்கள் கடிதம் இறுதியில் மிரட்டும் பாணியிலே உள்ளது. அன்று சபையில் நடந்ததும் இதுவே. ஒரு பிரச்னையைப் பேசும் இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் அனைத்து பிரச்னைகளையும் இழுத்து வந்து தயாரிப்பாளர்களைத் திசை திருப்பும் நோக்கம் யாருடையது என்று தெரியவில்லையா. எங்கள் நிறுவனம் பெறும் தீர்ப்பு, அனைத்து முன்பணம் கொடுத்து காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்குமானது என்று கூறி இருக்கிறார்.