அதிமுக மாநாட்டில் உணவு வீணடிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

By Dhilip Kumar · 22/8/2023

மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் எழுச்சி மாநாட்டில் டன் கணக்கு உணவுகள் வீண்அடிக்கப்பட்டு மாநாடு நடைபெற்ற இடத்திலேயே கிழே கொட்டப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் . அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு ஞாயிறு அன்று மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு மூன்று வேலையும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

மூன்று இடங்களில் தொண்டர்களுக்காக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் லட்ச கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உணவு கூடங்களில் சுமார் 10,000 தொழிலாளர்கள் உணவுகளை சமைத்து அங்கு வந்த தொண்டர்களுக்கு பரிமாறி வந்தனர். சாம்பார் சாதம், புளியோதரை சாதம் போன்றவை உணவுகள் அவர்களுக்கு தயார் செய்து வழங்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா கூறியிருந்தனர்.

ஞாயிறு காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் காலை முதலே அங்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அங்கு வந்த தொண்டர்களுக்கு மூன்று வேலை மட்டுமல்லாமல் இரவு வரை உணவுகள் வழங்கபட்டது. ஞாயிறு இரவு மாநாடு முடிவடைந்த நிலையில் அங்கு தொண்டர்களுக்கு தயார் செய்த. புளியோதரை உணவுகள் அங்கு அண்டா அண்டாவாக கொட்டப்பட்டு வீண் அடிக்கப்பட்டது. கொட்டப்பட்டு இருந்த உணவுகளின் மீது வாகனகள் ஏறி சென்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில் வீண் அடிக்கப்பட்ட உணவுகளை பொறுப்பாளர்களும் உடனடியாக ஆதரவற்ற இல்லங்கள், எத்தனையோ சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்திருக்கலம் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர். சமையல் மாஸ்டர் கூறுகையில் சாம்பார் சாதம் மாநாடு பந்தலில் சுட சுட வழங்கப்பட்டது ஞாயிறு மாலை 5 மணி வரை வரைக்கும் வழங்கபட்டது. அதனால் அங்கு வந்தோர் அதை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். ஆனால் புளியோதரை இரவே தயாரிக்க பட்டது அதனால் அந்த சாப்பாடு மீதமானது என்றனர். இந்த மீதமான உணவுகளை ஏற்றி செல்ல 150பேரை வைத்துள்ளோம்.

அமைச்சர் கூறியது:

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் “மாநாட்டை பொருத்தவரை பெரிய அளவிற்கு வெற்றி சகாப்தத்தை ஏற்படுத்தியது.  இந்த மாநாட்டில் 15 லட்சம்  முதல் 20 லட்சம் பேர் வருகை தந்தனர். எனவே வருவது குறித்து முன்கூட்டிய சமையல் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டது.

யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது என்ற அடிப்படையில் இங்கு வந்து அந்த குறை ஏற்பட்டது. இது ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இது போன்ற குறைகள் இல்லாமல் நடைபெறும்.  உணவுகள் அனைத்தும் முன்கூட்டியே பராமரித்து கொண்டதால் தற்போது விமர்சனத்துக்குள்ளாகியது.” என்றும் அவர் கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full