சாலையில் விபத்தில் சிக்கிய மூதாட்டியை காப்பாற்றி ஆட்டோவில் ஏற்றி வழி அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தற்போது அதிமுகவின் முக்கிய நபராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆளுங்கட்சியான திமுகவையும் அதன் செய்யல்படுகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். மழை காலங்களில் சென்னை சாலைகளில் பயணம் செய்வது சற்று சவாலாக இருந்து வருகிறது. சற்று காரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் சென்னையில் உள்ள சாலைகள் இருந்து வருகிறது.

சென்னை புழல் அருகே இரு சக்கர வானகத்தில் சென்று கொண்டு இருந்த மகன் மற்றும் அவருடைய தாயும் பயணம் செய்துள்ளனர். சாலைகளில் மழை நீர் தேங்கியதால் அவருக்கு பாதை சரியாக தெரியவில்லை. அப்போது அவர் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். அப்போது அவருடைய் தாய் கிழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் பட்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்துள்ளார்.

Advertisement

அதன் பின் அவரை மீட்க ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை. அந்த சமயத்தில் அந்த பகுதியில் வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேட்டியை மடித்து கட்டி அங்கு அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் அவர்களை மீட்டு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்க்க சொல்லியதோடு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுனருக்கு பணத்தையும் கொடுத்தார். இந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவியது.

இது குறித்து அவர் தனது முக நூல் பக்கத்தில் வீடியோவையும் பதிவேற்றம் செய்திருந்தார். அதில் “செங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரும்பிய போது சென்னை புழல் அருகே மூதாட்டி ஒருவருடன் இருச்சக்கர வாகனத்தில் வந்தவர் விபத்துக்குள்ளாகி இருந்தனர்.

Advertisement

10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தனர். பிறகு நான் ஆட்டோ ஒன்று ஏற்பாடு செய்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அந்த சாலையில் சென்ற யாரும் மூதாட்டி காயமுற்று கிடப்பதை கண்டும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதை பார்க்கும் போது மனிதம் மறந்து வருவதை நம்மால் உணர முடிந்தது. இன்று வேறொருவருக்கு என கடந்து போனால் நாளை நமக்கும் அது தான்! இருப்போம் சற்று ஈரத்துடன்!மருத்துவ உதவியே மகத்தான உதவி!” என்று பதிவேற்றம் செய்து இருந்தார்.

Advertisement

 

Advertisement