கிரைம் திரில்லர் பாணியில் வெளிவந்த 'ஃபோர்த் ஃப்ளோர்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 27/2/2026

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஆரி. தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஃபோர்த் ஃப்ளோர்(fourth floor). இந்த படத்தை இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை ராஜா தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் தலைவாசல் விஜய், சுப்பிரமணிய சிவா, பவித்ரா, தீப்ஷிகா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தரன் குமார் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ ஆரி கணினி துறையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். பணி மாறுதல் காரணமாக இவர் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஆரி தங்குகிறார். பின் தன் வேலையை செய்வது மட்டுமில்லாமல் போனில் உதவி கேட்ட தன்னுடைய முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார் ஆரி.

அப்போது அந்த வீட்டில் அவருடைய முன்னாள் காதலி படத்தை பார்த்து ஆரி அதிர்ச்சி அடைக்கிறார்.
அதற்குப்பின் தொடர்ந்து அந்த வீட்டில் இரவு நேரங்களில் அமானுஷ்ய தொடர்பாக கனவுகள் வருகிறது. இதனால் ஆரி ரொம்பவே பாதிக்கப்படுகிறார். நிஜத்தில் நடப்பது போல இருக்கும் சம்பவங்கள் மூலம் தன்னை சுற்றி ஏதோ ஒன்று நடக்கிறது என்பது ஆரி புரிந்து கொள்கிறார். பின் தன் கனவுக்கான தீர்வை கண்டுபிடிக்க ஆரி போராடுகிறார்.

அதற்குப்பின் பல உண்மைகள் வெளிவருகிறது. அந்த உண்மைகள் என்ன? ஆரியின் முன்னாள் காதலிக்கு என்ன ஆனது? ஆரியை சுற்றி நடக்கும் அமானுஷ்யங்களுக்கு காரணம் என்ன? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ ஆரி கணினி துறையில் வேலை செய்யும் இளைஞனாக இருந்தாலும் துப்பறிவாளராக அவர் நடித்திருக்கும் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருக்கிறது. ஆரி படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தன்னுடைய தோளில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

அடுத்து என்ன நடக்கும் என்ற சுவாரசியத்தை தன்னுடைய நடிப்பின் மூலம் ஆரி காண்பித்து இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். இவரை அடுத்து படத்தில் கதாநாயகிகளாக பவித்ரா, தீப்திகா வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய அழகு, நடிப்பு இரண்டின் மூலம் சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள். வில்லனாக
வரும் சுப்பிரமணிய சிவா முதல் பாதியில் தன்னுடைய முக பாவனைகளால் மிரட்டினாலும் இரண்டாம் பாதியில் தன்னுடைய நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அடுத்த என்ன நடக்கும் என்று சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. படத்தினுடைய ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்து இருக்கிறது. படத்தினுடைய கதைக்களத்தை இயக்குனர் எந்த ஒரு தோய்வும் இல்லாமல் நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக போர்த் ஃப்ளோர் இருக்கிறது.

நிறை:

ஆரி நடிப்பு

கதைக்களம் அருமை

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம்

கிரைம் திரில்லர் படம்

சுவாரசிய கதை

குறை:

ஆங்காங்கே லாஜிக் குறைப்பாடுகள்

சில காட்சிகள் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது.

மொத்தத்தில் போர்த் ஃப்ளோர் படம் - நல்ல முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full