இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா, ‘கடந்த 10 வருடங்களில் நீங்கள், எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர, உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை’ என்று கூறினார்.

ஏ ஆர் ரகுமான் இந்த தெளிவான பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்தது. விழா மேடையில் கதிஜா கண்கள் மட்டும் தெரியும் வகையில் பர்தா அணிந்திருந்தார். இந்த உடை மிகுந்த விவாதப் பொருளாக மாறியது. மேலும், ஏ ஆர் ரஹ்மான் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.

Advertisement

ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டுள்ளார். வெளியில் ஒரு தோற்றமும் உள்ளே வேறு மாதிரியானத் தோற்றமும் கொண்டவராக உள்ளார் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்
கதிஜா ரஹ்மான்.

அதில், நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனது தேர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் என் பெற்றோர்கள் பொறுப்பல்ல. விவரம் புரியாமல் தேவையில்லாத முடிவுகளுக்கு வரவேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

அதே போல ஏ ஆர் ரஹ்மானும் தனது ட்விட்டர் பக்கத்தில், ’நீடா அம்பானி உடன் தனது குடும்பத்துப் பெண்கள், கதிஜா, ரஹீமா, சாய்ரா’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதில், கதிஜாவைத் தவிர ரஹ்மானின்  இரண்டாவது மகளும் மனைவியும் பர்தா ஏதும் அணியவில்லை என்ற தகவலை மறைமுகமாக வெளிப்படுத்தி இருந்தார்.

Advertisement
Advertisement