சிகிச்சைக்கு கூட பணமில்லாமல் மருத்துவமனையில் பிரண்ட்ஸ் பட நடிகையின் பரிதாப நிலை.!

By Rajkumar · 24/2/2019

நடிகை விஜயலட்சுமி 'பிரன்ட்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். 

பிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2010ல் வந்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்'படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.

கடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடித்தார் விஜயலட்சுமி. இந்த படத்தின் இயக்குனர் சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார்  சீமான். இதன் காரணமாக 2006ஆம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்தார் விஜயலட்சுமி.

மேலும், போலீசிலும் புகார் செய்தார், ஆனால் இந்த வழக்கை விசாரிக்க மறுத்த போலீஸ் , சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் தொடர்பில்லை என கூறிவிட்டது. அதன்பின்னர் இந்த செய்தி அன்றைய தேதியில் பரபரப்பானது. கடந்த சில ஆண்டுகளாக சீரியலில் கூட வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார் விஜயலக்ஷ்மி. இந்த நிலையில் இவர் தற்பொழுது உயர் ரத்த  அழுத்தம் காரணமாக தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், இருந்த பணத்தை அம்மாவின் மருத்துவ செலவிற்காக செலவாகிவிட்டர்த்து அதனால் சினிமா துறையினர் உதவவேண்டும் என அவர் சகோதரி கேட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full