அறஞ்சா ஹர்பஜன் சிங் மாதிரி இருப்பேன். இந்த காட்சியை ஹர்பஜன் சிங்கிடமே காட்டியுள்ள சதீஷ்.

By Rajkumar · 8/3/2020

இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீப காலமாக இவர் கிரிக்கெட் விளையாட்டை தவிர சினிமா படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சமீபத்தில் தமிழில் ஸ்டேட்டஸ் ஒன்று போட்டு இருந்தார். அது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் தமிழில் முதன் முறையாக ஃப்ரெண்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார்.

https://www.instagram.com/p/B9d9lf6JHO_/?igshid=1owu7o6hb78z8

இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தை ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும், இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா, காமெடி நடிகர் சதீஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகர்கள் என்றால் அது யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் தான். இதில் யோகி பாபு பல்வேறு படங்களில் பட்டையை யோகி சதீஷ் மற்றும் சூரி காட்டில் கொஞ்சம் கம்மியாக தான் வாய்ப்புகள் குறைவாக தான் இருந்து வருகிறது.

ஆனால், சதீஷ் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சதீஷ் காமெடி நடிகராக பல திரைப்படம் நடித்துள்ளார். இதில் குறிப்பாக எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன் சதீஷை பார்த்து 'நீ சிரித்தால் ஸ்ரீசாந்த் மாதிரி இருப்ப' என்றும் அதற்கு சதீஷ் 'அடித்தால் ஹர்பஜன்சிங் மாதிரி இருப்பேன்' என்றும் கூறியவை காட்சி இடம்பெற்று இருக்கும். இந்தக் காட்சியை நடிகர் சதீஷ் தற்போது அவருடன் நடிக்கும் ஹர்பஜன் சிங்கிடம் காண்பிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் நடிகர் சதீஷ், ஹர்பஜன் சிங்கிடம் செல் போனில் வீடியோவை காண்பிக்கும் பொழுது ஹர்பஜன் சிங் முதலில் முறைத்து பார்க்கிறார் பின்பு சிரித்து சதீஷை கட்டிப்பிடிகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், ஐபிஎல் போட்டியின் போது ஹர்பஜன் சிங்கை கோபத்தில் கன்னத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full