பிரிவிற்குப் பிறகு ஜி.வி பிரகாஷ்- சைந்தவி பாடியிருக்கும் முதல் பாடல் - யார் படம் தெரியுமா?

By subhashini · 6/7/2024

பிரிவிற்குப் பிறகு ஜிவி பிரகாஷ்- சைந்தவி பாடியிருக்கும் முதல் பாடல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விமல். இவர் சினிமா உலகில் நுழைந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. இவர் படங்களில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன ரோலில் தான் நடித்து இருந்தார்.

https://www.youtube.com/watch?v=euNCLMlKdxQ

அதன் பின் இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பசங்க' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருந்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இவர் 3 ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின் இவர் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த குலசாமி, தெய்வ மச்சான், துடிக்கும் கரங்கள் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

சார் பாம்:

தற்போது விமல் அவர்கள் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மா.பொ.சி' படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சாயா கண்ணன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்று அர்த்தம். இந்த படத்தினுடைய போஸ்டரை சமீபத்தில் தான் பட குழு வெளியிட்டு இருந்தது. பின் சில சர்ச்சையின் காரணமாக இந்த படத்திற்கு 'சார்' என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ்- சைந்தவி பாடல்:

இந்தப் படத்தை எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி இணைந்து பாடியிருக்கும் தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது விவாகரத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ்- சைந்தவி இருவரும் இணைந்து 'பனங்கருக்கா' என்ற பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஜிவி பிரகாஷ்- சைந்தவி குடும்பம்:

ஜி.வி பிரகாஷ்- சைந்தவி இருவருமே சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள். இவர்களுடைய நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். அதற்கு பிறகு தான் கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு அன்வி என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ஜி.வி பிரகாஷ்- சைந்தவி இருவரும் விவாகரத்து செய்து இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இருவரும் பிரிய காரணம்:

காரணம், வருடம் வருடம் சைந்தவி தன்னுடைய திருமண நாளில் ஒரு பதிவு ஒன்று போடுவார். ஆனால், இந்த வருடம் அவர் எந்த ஒரு பதிவும் வெளியிடவில்லை, ஸ்டோரி கூட போடவில்லை. இதனை பார்த்து தான் ரசிகர்கள் பலருமேநீங்கள் இருவரும் பிரிகிறீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள் . அதனை தொர்ந்து சமீபத்தில் ஜீ.வி பிரகாஷ்-சைந்தவி இருவருமே தங்களது விவாகரத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full