பத்தாம் வகுப்பு படிக்கும்போது தான் அனுபவித்த கசப்பான கஷ்டங்களை குறித்து நடிகை கேப்ரில்லா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கேப்ரில்லா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் இவர் பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம்.

இதனால் இவர் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். பின் அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் பட்டத்தையும் வென்று இருந்தார். அதனை அடுத்து இவருக்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து இருந்தார் கேப்ரில்லா.

Advertisement

கேப்ரில்லா குறித்த தகவல்:

மேலும், சின்னத்திரை பிரபலத்தினால் கேப்ரில்லாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அந்த வகையில் இவர் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு இருந்தார். பின் கேபி 5 லட்ச ருபாய் பணத்துடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். அதிலும் இவர் BB ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்று இருந்தார். பின் இவர் ஈரமான ரோஜாவே 2வில் நடித்து இருந்தார்.

கேப்ரில்லா நடித்த சீரியல்:

ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பினார்கள். இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தின் மூலம் கேப்ரில்லா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும், இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவடைந்தது. இதனை அடுத்து கேப்ரில்லா சன் டிவிக்கு தாவி இருக்கிறார்.

Advertisement

கேப்ரில்லா பேட்டி:

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். இந்த சீரியலை வானத்தைப்போல தொடரை தயாரித்து வரும் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த சீரியலுக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சீரியலில் இவருக்கு ஜோடியாக நந்தினி, கண்ணே கலைமானே தொடர்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் கேப்ரில்லா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் 10-ம் வகுப்பு படித்த நேரத்தில் என்னிடம் போன் எல்லாம் கிடையாது.

Advertisement

கசப்பான அனுபவம் குறித்து சொன்னது:

அப்போது நான் என்னுடைய படிப்பில் தான் கவனம் செலுத்தினேன். அந்த நேரத்தில் என்னுடைய புகைப்படத்தை யாரோ மார்க்கிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருந்தது நானே கிடையாது. புதிதாக பார்ப்பவர்களுக்கு நான் தான் என்று தோன்றும் அளவிற்கு என்னைப்போலவே அந்த புகைப்படம் இருந்தது. அந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்தது. இதனால் நான் மூன்று நாட்கள் பள்ளிக்கு போகவில்லை. பள்ளியில் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். அதிலிருந்து வெளி வருவதற்கு எனக்கு கொஞ்ச நாட்கள் ஆனது என்று கூறியிருந்தார்.

Advertisement