கானா வினோத்தை வெளியே அனுப்பியது இந்த சூனியம் தான் - ஆவேசத்தில் கானா வினோத் நண்பர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 97 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார்.
பின் பார்வதி- கம்ருதீன் மோசமான செயலால் விஜய் சேதுபதி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. தற்போது பிக் பாஸ் வீட்டில் வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
கானா வினோத் வெளியேற்றம்:
இவர் பணப்பெட்டியில் இருந்த 18 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தான் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சி தான். இப்படி இருக்கும் நிலையில் கானா வினோத்தின் நண்பர் அளித்த பேட்டியில், கானா வினோத் ரொம்ப தங்கமான மனிதர். ரொம்ப கஷ்டப்பட்டு அடியில் இருந்து மேல மேல வந்தவர். அவர் அந்த பணத்தை எடுத்துட்டு வந்ததை நம்ம முடியவில்லை. ஆனால், இவர் இப்படி பண்ணதுக்கு காரணம் அழுத்தம் தான்.
முழுக்க முழுக்க அரோரா, ரம்யா, வியானா இவர்களெல்லாம் உள்ளே போய் தேவையில்லாதை எல்லாம் பேசி எங்க அண்ணன் மனதை கெடுத்து விட்டார்கள்.
https://www.youtube.com/watch?si=XwebcBBFq-rEaA6a&v=jpRF-XlyqLY&feature=youtu.be
கானா வினோத் நண்பர் பேட்டி:
குறிப்பா அரோரா செய்த சூழ்ச்சி தான். அரோரா, இப்பவே போனால் பணம் கிடைக்கும் என்று சொன்னதால் தான் வினோத் அண்ணா மனசு மாறி இருப்பார். இல்லை என்றால் அவர் கடைசி வரை நின்று வெற்றி பெற்றிருப்பார். கண்டிப்பாக அவர் பணத்தை எடுக்கவில்லை என்றால் அவர்தான் டைட்டில் வின்னர். அரோரா எங்க அண்ணனோட மூளை சலவை செய்து வெளியே துரத்தி விட்டிருக்கிறார். எக்ஸ் போட்டியாளர்கள் என்று சொல்லி சூனியம் பிடித்தவர்கள் உள்ளே வந்து தேவையில்லாத வேலையை பார்த்து இருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்.