பணப்பட்டியை எடுக்க வினோத்தை BRAIN WASH செய்தாரா அரோரா? வைரலாகும் வீடியோ

By subhashini · 9/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 95 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.

பிக் பாஸ் 9:

கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருந்தார்கள்.

ரெட் கார்ட்:

இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெறுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகியோர் இருக்கிறார்கள். அதோடு இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள்
பல பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

பணப்பெட்டி டாஸ்க்:

இவர் பணப்பெட்டியில் இருந்த 18 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு தான் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சீசனின் டைட்டில் பட்டதை கானா வினோத் வெல்வார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு வெளியேறியது பலருக்குமே அதிர்ச்சி தான். அதோடு இவர் இப்படி செய்ததற்கு காரணம் அரோரா தான் என்று ரசிகர்கள் திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கானா வினோத்தின் மனைவி பாக்யா போட்ட பதிவில், எவ்வளவு லவ் நீங்க வினோத் மேல, பாசத்துல என்னையே ஓவர் டேக் பண்ணிட்டீங்க. இந்த அன்பை விட வாங்க அந்த டைட்டில் பெருசு என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full