எங்களுக்கு பணத்தாசை கிடையாது, அனுமதி கேட்டால் அண்ணனே கொடுத்திருப்பார் - ஆவேசத்தில் கங்கை அமரன்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார்.
குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது.
மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த படம் வெளியாகி 200 கோடிக்கு அதிகமாக வசூலை செய்து இருக்கிறது.
இளையராஜா நோட்டீஸ்:
மேலும், இந்த படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது. இது இளையராஜாவின் உடைய பாடல்கள். இதனால் தன்னுடைய பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு பயன்படுத்தியதற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் அவர், தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு இது தொடர்பாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் விளக்கமளித்திருந்தார்.
தயாரிப்பாளர் சர்ச்சை:
அதில் அவர், படத்தில் இளையராஜா பாடல்களை அதில் எந்த தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி தான் வாங்கி இருக்கிறோம். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு தேவையான எல்லா அனுமதிகளையும் இசையில் லேபில்களிடமிருந்து வாங்கி இருக்கிறோம். அந்த உரிமைகள் அனைத்துமே லேபில்களுக்கே சொந்தமானது என்று கூறியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சியில் கங்கை அமரன் கூறி இருந்தது, காப்பி உரிமை விவகாரத்தில் நாங்கள் சர்வதேச விதிகளை தான் பின்பற்றி இருக்கிறோம். மைக்கேல் ஜாக்சன், தானே எழுதி நடனமாடி நடித்தவர் நடித்தார். இது அவர் கொண்டு வந்த திட்டம் தான். நாங்கள் முதலில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தோம். அங்கு பூஜை நாளில் எங்களுடன் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
https://www.youtube.com/watch?v=M-N0MALT9Fs
கங்கை அமரன் பேட்டி:
அதன்பிறகு எங்கள் பாடல் நல்ல வியாபாரம் செய்திருக்கும். ஆனால், எங்களுக்கு எந்த பங்குமே கிடைக்கவில்லை. அப்போதுதான் இந்த பிரச்சினையை பற்றி நாங்கள் தெரிந்து கொண்டோம். இந்த பிரச்சனைகளுக்கு பிறகுதான் அனைத்து பாடல்களின் இசை உரிமையையும் இளையராஜாவே வாங்கி வைத்துக்கொண்டார். அவை அனைத்துமே அண்ணனின் லைப்ரரியில் சேர்ந்துவிடும். கச்சேரிகளில் பாடுபவர்களை திட்டிய விவகாரத்தில் நான் அண்ணனிடம் அண்ணனிடம் சண்டை போட்டேன். எஸ்.பி பாலசுப்ரமணியன் திட்டியதற்கும் அண்ணனிடம் வாக்குவாதம் செய்தேன். அப்போது எங்களுக்குள் சின்ன சண்டைதான் வந்தது. அதற்கு பிறகு தான் மேடைகளில் பாடுபவர்களுக்கு ராயல்டி கட்ட தேவை இல்லை என்று முடிவானது. ஆனால், நாங்கள் படங்களில் பயன்படுத்தும் போது மட்டும் ராயல்டி கட்ட வேண்டும் என்றோம். 7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்திற்கு இசையமைப்பாளரை நியமிக்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=RfNt884F24g
ராயல்டி விவகாரம்:
அவர்கள் இசைக்கும் பாடல்களுக்கு கைதட்டல் கிடைக்காமல் எங்கள் பாடல்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது. அப்படி என்றால் எங்கள் பங்கு கிடைக்க வேண்டாமா? பாடலை பயன்படுத்த அண்ணனிடம் அனுமதி கேட்டால் அவர் உடனே கொடுத்து விடுவார். ஆனால், அவரிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்துவதால் தான் அண்ணன் கோபப்படுகிறார். எங்களுக்கு பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டி கிடைக்கிறது. நாங்கள் விதிகளின்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறோம். அஜித் படம் என்ற எந்த காரணமும் கிடையாது. திரையில் ஒழிப்பது எங்கள் பாடல். அவ்வளவுதான். எங்கள் பாடல்கள் தான் உங்களை வெற்றி பெற வைக்கின்றது என்று சந்தோஷப்படுகிறோம். எங்களிடம் அனுமதி கேட்டு இருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக கொடுத்திருப்போம் என்று கூறியிருக்கிறார்.