இந்திய நாட்டின் மிகச் சிறந்த பின்னணி பாடகரும், நடிகராகவும் திகழ்ந்தவர் எஸ்பிபி பாலசுப்ரமணியன். இவர் தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். பாடகர் எஸ்பிபி கடந்த 2020ஆம் ஆண்டு கொரானா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25 ஆம் தேதி காலமானார். இவருடைய இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி துவங்கி தற்போதுள்ள விஜய், அஜித் வரை அணைத்து முன்னனி ஹீரோக்களுக்கு பின்னணி பாடலை பாடியவர் எஸ் பிபாலசுப்ரமணியம் . 

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதுகளையும் பெற்றவர். கடைசியாக இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலையும் பாடியவர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

SPB மறைவு :

கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்ட போதும் அவருக்கு ஏற்பட்ட உடல் நிலை கோளாறு காரணமாக நேற்று மதியம் 1.04 மணி அளவில் அவர் உயிரிழந்தாக குழுவினர் அறிவித்து இருந்தனர். இதை தொடர்ந்து இன்று (செப்டம்பர் 26) எஸ் பி பியின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கத்தில் உள்ள அவரது நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் இழப்பு பேரிழப்பாக இருந்தாலும் இன்றும் அவர் பாடிய பாடல் வழியாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார்.

மூச்சு விடாமல் பாடிய பட்டு :

இவர் பல்லாயிரம் பாடல்களை பாடினாலும் சில பாடல்கள் என்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கும். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் எஸ்.பி சுப்பிரமணியம் நடித்து, பாடிய பாடல் “மண்ணில் இந்த காதல் அன்றி”. இயக்குனர் சுந்தரம் இயக்கத்தில் வெளியான “கேளடி கண்மணி” படத்தில் தான் இப்பாடல் பாடப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பாடலில் எஸ்.பி சுப்ரமணியன் பாடியும் நடித்தும் இருக்கிறார். மேலும் இப்பாடலில் எஸ்.பி பாலசுப்ரமணியன் மூச்சு விடாமல் பாடியது போல அமைக்கப்பட்டிருக்கும்.

Advertisement

கங்கை அமரன் கூறியது :

இப்பாடல் அன்று தொடங்கி இன்று வரையில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த நிலையில் இப்பாடலை சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நினைவு கூர்ந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் அந்த பாடல் பாடும் போது அதனை நான் மூச்சு விட்டுத்தான் பாடினேன், இதனை பார்த்தவுடன் அண்ணன்(இளையராஜா) ரெகார்ட் பணிக்கோ என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.

Advertisement

மூச்சு விடாமல் பாடியது ஏமாற்றும் வேலை :

பின்னர் நானும் பாலுவும் ஒன்றாக பேசி எந்த வரி வரை ஒருவர் பாட வேண்டும் பின்னர் அடுத்த வரியை யார் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாடி சேர்த்த பாடல்தான் அந்த மூச்சு விடாமல் பாடிய பாட்டு. அது ஒரு ஏமாற்று வேலை. பாலசுப்பிரமணி மூச்சு விடாம பாட வில்லை பாடவும் முடியாது. ஆனால் அதையும் தற்போது பாடியிருக்கிறார் அது சாதனை. நானும் பாலுவும் ஒரு நிகழ்ச்சியில் இருக்கும் போது ஒருவர் மூச்சு விடாமல் பாடினார். அது போன்றும் நாங்கள் பரிசோதனைக்காக செய்த்தை சாதனையாக செய்யக்கூடிய நபர்கள் வந்துவிட்டார்கள் என்று அந்த நிகழ்ச்சியில் கூறினார் பாடகர் கங்கை அமரன்.

Advertisement