மங்காத்தா மாதிரி படம் பண்ணலாம்ன்னு விஜய் சொன்னார் - கொளுத்திப் போட்ட கங்கை அமரன். மாய்ந்துகொள்ளும் ரசிகர்கள்.

By Ajju · 6/6/2023

விஜய்யின் தளபதி 68 படத்தின் கதை குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

https://www.youtube.com/watch?v=Da9cdequ1j8

இந்த படத்தை தொடர்ந்து இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி லிஸ்டில் சேர்ந்தது. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, நாசர், போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது. மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

லியோ படம்:

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றி வருகிறார்கள். இதனை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 68 படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்திற்கு இசையமைப்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இணைந்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்திற்கு கதாநாயகியாக தமன்னா, கீர்த்தி செட்டி இடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கங்கை அமரன் அளித்த பேட்டி:

மேலும், ஜூன் மாதம் விஜயின் பிறந்தநாள் வருவதால் இந்த படத்தின் டைட்டிலையும் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் தளபதி 68 படம் குறித்து கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு கங்கை அமரன் பேட்டியளித்திருந்தார். அதில் அவர், மங்காத்தா படம் வெளிவந்த போது விஜய் படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவை ரொம்பவே பாராட்டி இருந்தார்.

தளபதி 68 படம் குறித்து சொன்னது:

இந்த மாதிரி கேரக்டர் என்று சொல்லி இருந்தால் நானே நடித்திருப்பேன் என்றெல்லாம் விஜய் கூறியிருந்தார். மங்காத்தா மாதிரி ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் சேர்ந்து பண்ணலாம் என்று அப்போதே விஜய் சொன்னார். தற்போது அப்படியான கதை ஒன்று மனதுக்குள் தோன்றியதால் உடனே அதை விஜய் இடம் சொல்லி படத்தை ஓகே செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு. மங்காத்தா படம் வெளியான போது அவர்கள் பேசியது இப்ப நடக்க இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full