'நல்ல கவிஞன் ஆனால் நல்ல மனிதனே கிடையாது' வைரமுத்துவை வெளுத்து வாங்கிய கங்கை அமரன்

By subhashini · 12/6/2025

பாடகி சின்மயிக்கு ஆதரவாக கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் விவகாரம் தான் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது கமல் நடித்து வெளியாகி இருக்கும் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும், சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது.

இந்த படத்தில் முத்த மழை என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலை பாடகி தீ தான் பாடியிருக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்த பாடலை பாடகி சின்மயி பாடி இருந்தார். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி தான் முத்த மழை பாடலை பாடி இருந்தார். இந்த பாடலை கேட்டு எல்லோரும், தீ பாடியது விட சின்மயி பாடிய வெர்சன் தான் அழகாய் இருக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது என்று இருவரையும் ஒப்பிட்டு கமெண்ட்ஸ்களை போட்டு இருந்தார்கள். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சின்மயி, என்னையும் தீயையும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

தக் லைப் படம்:

என்னுடைய வேலையை தான் நான் செய்தேன். பாடகி தீக்கு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க முடியாது. எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது அவசியம் அற்றது என நினைக்கிறேன் என்று கூறி இருந்தார். இருந்தாலும் சின்மயின் குரலைக் கேட்டு பலருமே பாராட்டி இருக்கிறார்கள். இந்தக் குரலையாட இத்தனை வருடமாக பேன் செய்து வைத்திருந்தீர்கள்? என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து சின்மயி, தமிழ் சினிமாவில் பாட தடை விதிக்கப்பட்டதும் அவர் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து நிறைய செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

சின்மயிக்கு ஆதரவு:

அதனால் நாளுக்கு நாள் சின்மயிக்கு ஆதரவுகள் பெருகிக்கொண்டே வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் உடன் சேர்ந்து சின்மயி பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அப்போது வைரமுத்து மீது சின்மயி வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார்கள். அதற்கு கங்கை அமரன், வைரமுத்து தங்கமான ஆளு. அவரை ஏம்மா இப்படி தவறா பேசுற? அவர் மீது நீ குற்றம் சொல்லலாமா? அவர் ஒரு உத்தமான ஆளு. அவர் அதிசய பிறவி என்று நக்கலாக பேசி இருந்தார். அதற்கு பின் பேசிய கங்கை அமரன், வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல மனிதரே கிடையாது.

வைரமுத்து பற்றி சொன்னது:

நாங்கள் எல்லாம் நண்பர்கள் தான். ஆனால், நண்பர் என்பதற்காக அவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா? ஒரு பெண், தனக்கு நடந்த பிரச்சனைகளை பேசும்போது அதற்கு ஆதரவாக தான் பேச முடியும். சின்மயி பின்னணி பாடகியாக ஆகுவதற்கும், இந்த துறையில் வளர்வதற்கும் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். தனக்கு நடந்த அசிங்கத்தை வெளியில் சொன்ன பின்னரும் அவள் வாழ்க்கையில் நிறைய கஷ்டம் வந்திருக்கிறது.

https://www.youtube.com/watch?v=w5zsDJFlqHI

கங்கை அமரன் சொன்னது:

அநியாயத்தை கேட்பதற்கு ஒரு பெண் தயாராக இருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு நான் எப்போதும் தயார் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இப்படி கங்கை அமரன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் கங்கை அமரனை விமர்சித்து வருகிறார்கள். அதோடு ஏற்கனவே காப்பிரிமை விவகாரத்தில் இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்துக்கு இடையே பிரச்சனை இருக்கிறது. இதனால் இளையராஜாவை வைரமுத்து மறைமுகமாக திட்டி பதிவுகளை எல்லாம் போட்டிருந்தார். இந்த விவகாரத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் கங்கை அமரனும் வைரமுத்துவை விமர்சித்து இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள்

behindtalkies AMP · Quick view
View full