ஏய், வாய மூடு, நான் தான் எழுதினேன் என்னயா பண்ணுவ - இளையராஜா சர்ச்சை குறித்து கேட்ட Anchorயிடம் கத்தி கூச்சலிட்ட கங்கை அமரன்.
தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து இருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளார். இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
https://twitter.com/slmdhanapal/status/1521321601752469504
அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது.இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார்.
மோடி குறித்து இளையராஜா :
மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறி இருந்தது,பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
https://twitter.com/devashak/status/1521396654091370497
மோடி - அம்பேத்கர் :
குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார்.அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.
https://twitter.com/adi10vj/status/1521175292299333637
இளையராஜா குறித்து கங்கை அமரன் :
பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மோடி குறித்து இளையராஜா பேசியது பற்றி அவருக்கே போன் செய்து கேட்டேன். உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று நேற்று இளையராஜாவிடம் கேட்டேன்.அதற்கு பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார்.
https://twitter.com/Neelambaran123/status/1521381175276695552
கங்கை அமரன் பேட்டி :
அது தன்னுடைய சொந்த கருத்து என்றார். அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று கங்கை அமரன் கூறி இருந்தார். கங்கை அமரன் Bjpயில் பல ஆண்டுகளுக்கு முன்பே இணைந்தார். அதே போல கடந்த சில வருடங்களாக இளையராஜாவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்தார்.
https://www.youtube.com/watch?v=9NyO1EDGVXw
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கையமரனிடம், இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது குறித்து கேட்கப்பட்ட போது ஆவேசம் அடைந்த கங்கையமரன் 'மோடி குறித்து இளையராஜா எழுதிய முன்னுரையை நான் எழுதினேன்னு சொல்றவன் முட்டாள், அறிவில்லாத நாய்' என்று கூறியுள்ளார். மேலும், இந்த பேட்டியில் ஆங்கரை ஏய், வாயா, போயா என்று கங்கை அமரன் பேசியதை கண்டு நெட்டிசன்கள் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.