வடிவேலு மேல் எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான் - கேங்கர்ஸ் பட விழாவில் மனம் திறந்த இயக்குனர் சுந்தர்.சி

By subhashini · 17/4/2025

வடிவேலு பற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் இயக்கி நடித்த படங்கள் பெரும்பாலானவை காமெடி படங்களாக தான். அதோடு இவருடைய படத்திற்கு காமெடிக்கு பஞ்சம் இல்லை என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு ஒரு மொத்த காமெடி பேக்கேஜ் காம்போவாக கொடுப்பார்.

இவர் முதன் முதலில் கவுண்டமணியுடன் இணைந்து தான் பணிபுரிந்தார். அந்த படங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தது. அதற்குப் பிறகு வடிவேலு உடன் இணைந்து நடித்து இருந்தார். இவர்களுடைய கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் நன்றாக இருந்தது. திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில சர்ச்சையால் பிரிந்து விட்டார்கள். அதற்கு பிறகு தான் சுந்தர்.சி அவர்கள் விவேக் மற்றும் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றி வந்தார்.

சுந்தர் சி-வடிவேலு சண்டை:

அதுமட்டுமில்லாமல் இவர் சந்தானத்துடன் இணைந்து பணியாற்றி இருந்ததை வடிவேல் இடம் சொல்லவில்லை என்றும் இந்த காரணத்தினால் தான் சுந்தர் சி, வடிவேலு இடையே தான் ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது. உண்மையாக இருவருக்கும் மத்தியில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், இவர்களுடைய கூட்டணியில் படங்கள் வெளியாகாமல் தான் இருந்தது. மேலும், மீண்டும் சுந்தர் சி- வடிவேலு கூட்டணியில் படம் உருவாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

சுந்தர் சி-வடிவேலு கூட்டணி:

சண்டையை எல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு இருவரும் இணைந்து இருக்கிறார்கள். அரண்மனை 4க்கு பிறகு சுந்தர் சி இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி மற்றும் வடிவேலு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் கேத்தரின் தெரேசா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தினுடைய ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் ஏப்ரல் 26 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.

விழாவில் சுந்தர்.சி:

இப்படி இருக்கும் நிலையில் படத்தினுடைய ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் சி, நானும் வடிவேலு சாரும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஒன்றாக பணியாற்றி வருகிறோம். 2003இல் வடிவேல் சாருடன் என்னுடைய பயணம் தொடங்கியது. ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா? என்று இன்னுமே அவரை பார்த்து நான் வியந்து கொண்டுதான் இருக்கிறேன். படத்தில் ஒரு சாதாரண காட்சியாக இருந்தால் கூட அதற்கு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் அற்புதமாக இருக்கும். நடிப்பில் லெஜெண்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார் தான். ஒரு காட்சிக்கு நான் 10 சதவீதம் யோசித்தால் போதும் மீதி 90% அவரே நடிப்பில் சிறப்பாக காண்பித்து விடுவார்.

https://www.youtube.com/watch?v=lYIkqdy2jho

வடிவேலு பற்றி சொன்னது:

அதனால் எல்லா நடிகர்களும் இவர் மாஸ்டர் என்று சொல்லாம். ஒரு மனிதன் இத்தனை வருடங்களாக சிரிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. 100 வருஷம் எல்லோரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தனும். இந்த படத்தில் இவருடன் பணியாற்றியது இயக்குனராக இல்லை ஒரு ரசிகனாக இருந்து இவரை நான் ரசித்துக் கொண்டிருந்தேன். வடிவேல் சார் மீது எனக்கு ஒரு சின்ன வருத்தம் தான் இருந்தது. இடையில் கொஞ்சம் நடிக்காமல் இருந்தது தான் காரணம். அந்த கேப்பில் அவர் நடித்திருந்தால் எத்தனை படங்களை நாம் ரசித்திருப்போம். இனிமேல் அவரைப் பார்த்து, சிங்கம் களம் இறங்கிவிட்டது என எல்லோருமே சொல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full