தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. விடுதலை படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கருடன். இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஒரு கிராமத்தில் அமைச்சர் ஒருவர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை தனக்கு சொந்தமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், அந்த இடத்தின் உடைய மூல பத்திரம் கோயில் டிரஸ்ட் இடம் இருக்கிறது. அவர் அந்தப் பத்திரத்தை எப்படியாவது கைப்பற்றி தன்வசம் ஆக்க பல திட்டங்கள் போடுகிறார். இன்னொரு பக்கம் அதே ஊரில் சசிகுமார், உன்னி முகுந்தன் என இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

Advertisement

இருவருமே இணைபிரியாத நட்புடன் இருக்கிறார்கள். உன்னியின் நிழலாகவும், அவருக்கு விசுவாசமாக இருப்பவர் தான் சொக்கன் சூரி. மேலும், அமைச்சர் போடும் திட்டத்தை இந்த இரண்டு நண்பர்கள் முறி அடித்தார்களா? இதில் சூரியின் பங்கு என்ன? அமைச்சர் ஏன் அந்த நிலத்தை அடையப் பார்க்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் சூரி, சொக்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட சொக்கன் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

நடிப்பு, ஆக்சன் என்ற எல்லாத்திலேயும் சூரி சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறார். கதைக்களம் நன்றாக இருக்கிறது. அதோடு இயக்குனர் அதை கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருக்கிறது. இவர்களை தொடர்ந்து படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உடைய நடிப்பு மிரட்டலாக இருக்கிறது. முதல் பாதி கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் தான் விறுவிறுப்பை இயக்குனர் காண்பித்திருக்கிறார்.

Advertisement

இரண்டாம் பாதியின் கிளைமாக்ஸ் எல்லாம் மிரட்டலாக இருக்கிறது. நாம் யோசிப்பதை விட சிறப்பாக இயக்குனர் கொடுத்திருக்கிறார். ஆனால், படத்தில் கதாநாயகிக்கு பெரிய ஸ்கோப் இல்லை. அவர் தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இதை அடுத்து படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பெரிய பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் கிராம பின்னணியில் இப்படி ஒரு கதைக்களம் அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக அனைவரையும் ரசிக்கும்படி இந்த படம் இருக்கிறது.

Advertisement

நிறை:

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் நடிப்பு சிறப்பு

கதைக்களம் அருமை

இயக்குனர் கொண்டு சேர்ந்த விதமும் நன்றாக இருக்கிறது

இரண்டாம் பாதி அட்டகாசமாக இருக்கிறது

ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்

கதாநாயகி படத்திற்கு தேவையே இல்லை

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் கருடன் – உயரத்தைத் தொடும்

Advertisement