கம்பீர் எங்களுக்கு வேண்டாம்.. நீங்களே வெச்சிக்கோங்க !... இந்திய அணியை கலாய்த்த ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்ட்
கம்பீர் எங்களுக்கு வேண்டாம்.. நீங்களே வெச்சிக்கோங்க !... இந்திய அணியை கலாய்த்த ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்ட்
அயர்லாந்திடம் தொடரை இழந்த இந்தியா... தொடங்கிய விமர்சனங்கள்
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்தது உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. கிரிக்கெட்டில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா, ஒப்பீட்டளவில் அனுபவம் குறைந்த அயர்லாந்திடம் தொடரை பறிகொடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அணியின் பேட்டிங், பந்துவீச்சு, கேப்டன்சி மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் வியூகங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஐஸ்லாந்து கிரிக்கெட் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"கம்பீர்ரை நாங்கள் பயிற்சியாளராக விரும்பவில்லை"
எப்போதும் நகைச்சுவையான பதிவுகளால் கவனம் ஈர்க்கும் ஐஸ்லாந்து கிரிக்கெட், தனது எக்ஸ் (X) பக்கத்தில் கவுதம் கம்பீரை மறைமுகமாக கலாய்த்துள்ளது. அந்தப் பதிவில், "கவுதம் கம்பீரை எங்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்க நாங்கள் விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறோம். அவருக்கு திறமை இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தியா போன்ற வலுவான அணியை அழைத்துக்கொண்டு வந்து அயர்லாந்தில் இப்படிப்பட்ட முடிவுகளைப் பெறுவது உண்மையிலேயே அபாரமான திறமை" என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளது.
கம்பீரின் பயிற்சியின் மீது எழும் கேள்விகள்
இந்தப் பதிவு நேரடியாக கவுதம் கம்பீரின் பயிற்சியாளர் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் சமீபத்திய தோல்விகள், அணித் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சைகள், இளம் வீரர்களின் பயன்பாடு மற்றும் ஆட்ட வியூகங்கள் குறித்து ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது வெளிநாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இந்த நகைச்சுவைப் பதிவு மேலும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு
ஐஸ்லாந்து கிரிக்கெட்டின் இந்த பதிவு சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பகிர்வுகளை பெற்று வைரலாகியுள்ளது. இந்திய ரசிகர்களில் ஒரு தரப்பினர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், மற்றொரு தரப்பினர் இந்திய அணி மீதான தேவையற்ற கிண்டல் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், அயர்லாந்து தொடரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு இந்திய அணி விரைவில் மீண்டு வந்து தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடரும் அழுத்தம்... பதிலடி கொடுக்குமா இந்திய அணி?
அயர்லாந்திடம் தொடரை இழந்ததன் விளைவாக இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. கவுதம் கம்பீரின் பயிற்சி, அணித் தேர்வு மற்றும் வீரர்களின் செயல்பாடு குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அடுத்த தொடரில் இந்திய அணி எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஐஸ்லாந்து கிரிக்கெட்டின் இந்த ஒரு பதிவு, இந்திய அணியின் தோல்வி உலக கிரிக்கெட் வட்டாரத்தில் எந்த அளவுக்கு பேசப்படுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.