நீங்க இந்த ஜாதி, அவங்க மலையாளி, அப்புறம் எப்படி வீட்ல ஒத்துக்குடாங்க - சர்ச்சை கேள்விக்கு கெளதம் கார்த்திக்கின் நச் பதில்.

By Rajkumar · 26/11/2022

ஜாதி குறித்து கேட்ட கேள்விக்கு கெளதம் - மஞ்சிமா கொடுத்து இருக்கும் பதில் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஒருவர். கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய், என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் அவர்கள் ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல, 1947 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதே போல சிம்புவின் 10தல படத்திலும் நடித்து வருகிறார்.

கெளதம் - மஞ்சிமா காதல் :

இந்த நிலையில் தனது திருமணம் குறித்து கௌதம் கார்த்திக் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், கௌதம் கார்த்தியிடம் திருமணம் எப்போது என்று கேட்டிருக்கிறார்? அதற்கு கௌதம் கார்த்திக், விரைவில் நடக்கும் என கூறி இருந்தார்.

வீடியோவில் 5 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=Quw1_uZwhoA&t=320s

இப்படி இவர் கூறியதன் மூலம் பொண்ணு ரெடி போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியிருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

வைரலாகும் பத்திரிகை :

அதோடு இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் தங்கள் காதலை இருவரும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர். சமீபத்தில் தான் இவர்களின் திருமண பத்திரிகை வெளியாகிஇருந்தது. அந்த திருமண பத்திரிகை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு இந்த திருமண அழைப்பு அழகிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/shorts/EngLLpLnu98

ஜாதி குறித்து கேட்ட பத்திரிக்கையாளர் :

சமீபத்தில் பிரெஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்து தங்கள் திருமணத்தை அறிவித்து இருந்தனர். அப்போது பத்திரியாகையாளர் ஒருவர் உங்க அப்பா Forward Block கட்சிய வச்சிருக்கார், நீங்க தேவர் குலத்தை சேர்ந்தவங்க, மஞ்சிமா கேரளாவை சேர்ந்தவங்க உங்க திருமணத்துக்கு உங்க வீட்டுல எப்படி சம்மதிச்சாங்க என்று கேட்டிருந்தார். இதற்கு 'அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று கௌதம் கார்த்திக் சொல்ல அருகில் இருந்து மஞ்சிமா, சிரித்தபடி மஞ்சுமா 'சார் ப்ளீஸ்' என்று தன்மையுடன் கூறியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full