மணிரத்தினத்திடம் கதை சொல்ல மாதவன் தான் வற்புறுத்தினார், ஆனா- மனம் திறந்த கௌதம் மேனன்
மாதவனை இந்த காரணத்தினால் தான் வெறுத்தேன் என்று கௌதம் மேனன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிகரும் ஆவார். இவர் முதன்முதலில் இயக்கிய படம் மின்னலே. இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தவர் மாதவன்.
இவர்களுடன் இந்த படத்தில் அப்பாஸ், ரீமா சென், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் வாசுதேவ் மேனன், நான் என்னுடைய முதல் படத்தின் ஸ்கிரிப்டான மின்னலே படத்தை பற்றி மணி சாரிடம் சொல்ல வேண்டும் என்று மாதவன் சொன்னார். அவர் ஓகே சொல்லவில்லை என்றால் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று மாதவன் சொன்னார்.
கௌதம் மேனன் பேட்டி:
இதனால் எனக்கு மாதவன் மீது பயங்கர கோபம். மேலும், மணி சார் எனக்கு குரு. அவரை எப்போதுமே நான் பிரம்மிப்போடு தான் பார்ப்பேன். பின் நான் என்னுடைய கதையை அவரிடம் சொல்ல போனேன். முதலில் தயங்கினேன் இருந்தாலுமே தடுமாறி கதையை நான் மணி சாரிடம் சொன்னேன். அவருக்கு கதை மீது பெரிதாக ஆர்வம் இல்லை. ஒரு வழியாக என்னுடைய நிலைமையை புரிந்து கொண்ட மாதவன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
மணிரத்தினம்- மாதவன் குறித்து சொன்னது:
அதற்குப் பிறகு இந்த படத்தையும் எடுத்தேன். 2001 ஆம் ஆண்டு மின்னலே படம் வெளியாகியிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. அதற்குப் பிறகு இந்த படத்தை ஹிந்தியிலும் ரீமேக்ஸ் செய்து வெளியிட்டார்கள். அதிலும் மாதவன் தான் நடித்திருந்தார். பிறகு பத்தாண்டுகள் கழித்து கன்னடத்திலும் இந்த படம் வெளியாகியிருந்தது என்று கூறியிருந்தார்.
கௌதம் மேனன் திரைப்பயணம்:
மேலும், கௌதம் மேனன் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் தான். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும், சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கௌதம் நடித்த படங்கள்:
சமீபத்தில் இவர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த லியோ படத்தில் நடித்து இருந்தார். அதை அடுத்து தங்கர் பச்சனின் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த ரத்னம் என்ற படத்தில் கௌதம் நடித்து இருந்தார். ஆனால், இவர் கடைசியாக இயக்கிய ஜோசுவா இமைபோல் காக்க படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது இவர் நடித்தும், இயக்கியும் வருகிறார்.