நான் நடிச்ச ஒரு ரெண்டு மூனு படங்கள் கசப்பான அனுபவம் கொடுத்திருக்கு - கௌதம் மேனன் (எந்த படங்கள சொல்றாரு ? )

By Rajkumar · 29/1/2022

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ இயக்குனர்கள் தற்போது நடிகர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் கெளதம் மேனனும் ஒருவர். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர் இவர் இயக்கிய பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது. அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் கெளதம் மேனனை விட நடிகர் கெளதம் மேனனை தான் அதிகம் பேருக்கு பிடிக்கும். அதிலும் குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

கெளதம் மேனனின் அன்பு செல்வன் :

மேலும், இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ருத்ர தாண்டவம் ' படத்தில் கூட நடித்து இருந்தார். சமீபத்தில் கூட 'அன்புச்செல்வன்' என்ற படத்தில் கெளதம் மேனன் நடித்து இருந்த போஸ்டர் ஒன்று வெளியானது. ஆனால், அந்த படத்தில் தான் நடிக்கவே இல்லை என்று கூறி இருந்தார் கெளதம் மேனன். ஆனால், அந்த படத்தில் கெளதம் மேனன் நடித்த காட்சிகளின் வீடியோக்களை அந்த படத்தை தயாரித்த  “Seventy MM studios” நிறுவனம் வெளியிட்டது.

காசுக்காக நடிக்கிறேனா ? :

சமீபத்தில் நடிகர் கெளதம் மேனன் பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ்ஜின் யூடுயூப் பக்க பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது கோலிவுட்டில் கெளதம் மேனன் இல்லை என்றால் நான் பாடமே எடுக்க மாட்டேன் என்று ஒரு நாள் சொல்லும் நிலை வரும். அடிக்கடி ஏதாவது ஒரு அறிவிப்பு, அடிக்கடி ஏதாவது ஒரு போஸ்டர் வந்து கொண்டே இருக்கிறது, என்ன தான் நடக்கிறது என்று கேள்வி கேட்டு இருந்தார் பரத்வாஜ். இதற்கு பதில் அளித்த கெளதம் மேனன் 'நான் பொருளாதாரத்தில் நலிவடைந்துள்ளேன் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

படங்களில் நடிக்க காரணம் :

என்னிடம் பணம் இல்லை அதனால்தான் நான் பல படங்களில் நடித்து வருகிறேன் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஆனால், அது எல்லாம் ஒன்றும் இல்லை. எனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக படங்களில் தோன்றுவதே ஒரு கொண்டாட்டம் தானே அதேபோல நான் நடிக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணியது கிடையாது அதே சமயத்தில் அது எப்போதாவது நடந்து வருகிறது அதனால் அது ஒன்றும் தவறு கிடையாது.

பாவக்கதையில் நடிக்க காரணம் :

ஏன் பண்ண கூடாது என்று எனக்குள் தோன்றும். சில சமயங்களில் நாம் யாரையாவது நடிக்க கேட்டால் அவர்கள் மறுத்து விடுவார்கள் அதனால் அந்த கதாபாத்திரத்தில் நானே நடித்து விடுவேன். பாவ கதைகளிலும் அப்படித்தான் நடந்தது. அதில் வேறு ஒருவர் தான் நடிப்பதாக இருந்தது ஒரு இயக்குனராக மற்ற இயக்குனர்களின் வேலைப்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே நான் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் படத்தில் கூட நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். மணிரத்னம் சார் கால் செய்து கேட்டால் அது ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் நான் அதை நிச்சயம் பண்ணுவேன்.

வீடியோவில் 5 : 25 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?time_continue=327&v=-Dq_adpyKAA&feature=emb_title

படங்களால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் :

அதன் மூலம் அவர் அவருடைய வேலைகளை எப்படி செய்கிறார் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும். இதுவரை நான் பெரிதாக சம்பளம் வாங்கியது கிடையாது. ஆனால் மகிழ்வுடனே நான் இருக்கிறேன். அதேபோல மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போது இருக்கும் பிரச்சினைகள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கும் கௌதம் மேனன் 'நான் நடித்த ஒரு சில படங்களினால் கசப்பான அனுபவங்களும் வந்து இருக்கிறது, பிரச்சனைகள் எல்லாம் கூட வந்து இருக்கிறது' என்று கூறியுள்ளார் கெளதம் மேனன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full