ENPT படம் என்னுடையது இல்லைன்னு சொல்ல இது தான் காரணம் - கௌதம் வாசுதேவ் மேனன் கொடுத்த விளக்கம்
எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்பான சர்ச்சைகளுக்கு கௌதம் மேனன் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசு தேவ் மேனன். தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்.
இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் தான் இவர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கௌதம் மேனன் குறித்த தகவல்:
பின் இவர் சிம்புவை வைத்து இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இதை அடுத்து கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.
கௌதம் மேனன் பேட்டி:
தற்போது கௌதம் மேனன் நடித்தும் இயக்கியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படம் ‘Dominic and the Ladies Purse’. இந்த படத்தின் மூலம் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்திருக்கிறார். மேலும், இந்த படத்திற்கான ப்ரமோஷன் போது கௌதம் மேனன் அளித்த பேட்டியில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார்கள்.
எனை நோக்கி பாயும் தோட்டா படம்:
அதற்கு கௌதம் மேனன், பதிலளிக்காமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின் அவர், அந்த படத்தின் பெயர் என்ன சொன்னீர்கள்? எனக்கு அதில் ஒரு பாடல் மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அந்த படத்தை நான் இயக்கவில்லை. வேறு யாராவது இயக்கி இருப்பார்கள் என்று கூறி இருந்தார். இதன் மூலம் தனுஷ்-கௌதம் மேனன் இடையே சர்ச்சை இருப்பது தெளிவாக தெரிகிறது. இதை அடுத்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் எழுந்தது. அதோடு எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கியது தனுஷா? என்ற விவாதம் வந்தது.
https://www.youtube.com/watch?v=MPHeby8QPI8
கௌதம் மேனன் விளக்கம்:
இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் மேனன், நான் ஜோக்காக தான் அந்த விஷயத்தை சொன்னேன். அது என்னுடைய சொந்த படம். நான் தான் அந்த படத்தை தயாரித்தேன். அந்த ஒரு படத்தை மட்டும் தான் என்னால் நினைத்த அளவுக்கு எடுக்க முடியவில்லை. நான் ஜோக்காக சொன்ன விஷயத்தை இப்படி எடுத்து பெரியதாகி விட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.