சூர்யா கிட்ட நான் உதவியாக கூட கேட்கல, 'துருவ நட்சத்திரம்' குறித்து மனம் திறந்த இயக்குனர் கௌதம் மேனன்

By krithika · 19/1/2025

பிரபல இயக்குனர் கௌதம் மேனன், சூர்யா குறித்து சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக சூர்யாவின் நடிப்பில் இவர் இயக்கிய 'காக்க காக்க' மற்றும் 'வாரணம் ஆயிரம்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

துருவ நட்சத்திரம்:

அதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் மற்றும் சூர்யா இருவரும் மீண்டும் ' துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் சூர்யா அந்த படத்தில் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு அந்த படத்தில் நடிகர் விக்ரம் கமிட்டானார். இந்நிலையில் சூர்யாவுக்கும், தனக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=MHjpSNBDWSA

கௌதம் மேனன் பேட்டி:

இது குறித்து அவர், நான் என்னுடன் இணைந்த நடிகர்களுடன் மீண்டும் இணைவது குறித்து பேசும் பொழுது, என்ன இவன் எப்போதும் கரித்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைப்பார்கள். அவர்களால் நான் கேட்ட அந்த சமயத்தில் ஓகே சொல்ல முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு சூர்யா கண்டிப்பாக நோ சொல்லி இருக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

சூர்யா புரிந்து கொள்ளவில்லை:

ஏனென்றால், காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் எந்த பாணியில் உருவாக்கப்பட்டதோ அதே பாணியில் தான் துருவ நட்சத்திரமும் உருவாக்கப்பட்டது. வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்திற்கு நானா படேகர் மற்றும் மோகன்லால் ஆகியோரை தான் நான் முதலில் நடிக்க கேட்டிருந்தேன். ஆனால், அவர்களால் நடிக்க முடியாமல் போனது. அந்த சமயத்தில் சூர்யா, தந்தை கதாபாத்திரத்தை நானே நடிக்கிறேன் என்று தைரியமாகச் சொன்னார். அப்படி சொன்ன சூர்யாவிற்கு 'துருவ நட்சத்திரம்' படத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.

சூர்யா என்னை நம்பவில்லை:

மேலும், துருவ நட்சத்திரம் படம் தொடர்பாக நிறைய டிஸ்கஷன்ஸ் நடத்தப்பட்டது. அவர் படத்திற்கான ரெஃபரன்ஸ் பாயிண்ட்களை கேட்டார். நான் அவரிடம் அது பற்றி பேசாமல், நீங்கள் உள்ளே வந்தால் போதும், நான் வேறு மாதிரியான ஒரு படத்தை எடுப்பேன் என்றும் அதில் ஆக்சன் எல்லாம் வேறு மாதிரி இருக்கும் என்றெல்லாம் கூறினேன். ஆனால், அந்தப் படம் நடக்கவில்லை. இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், காக்க காக்க, வாரணம் ஆயிரம் என இரண்டு படங்களை அவருக்காக கொடுத்த இயக்குனரை அவர் நம்பவில்லையே என்பதுதான் என்று வருத்தத்தோடு பேசியிருந்தார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full