வாரணம் ஆயிரம் படத்தில் அசினா? பல ஆண்டுகள் கழித்து கெளதம் மேனன் சொன்ன உண்மை.

By subhashini · 12/3/2024

வாரணம் ஆயிரம் படம் உருவான விதம் குறித்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசு தேவ் மேனன். இவர் இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் சமீரா என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருந்தது.

ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும்,
கௌதம் மேனன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை எடுத்தார்என்றும் அந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவின் இன்ஸ்பிரேஷன் கௌதம் மேனன் தந்தை தான் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வாரணம் ஆயிரம் படம் உருவான விதம் குறித்து சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

கௌதம் மேனன் பேட்டி:

அதில் அவர், முதலில் வாரணம் ஆயிரம் படத்தில் அசின், சூர்யா, டேனியல் பாலாஜி நடிக்க இருந்தார்கள். அதற்கான வேலைகள் எல்லாம் எடுத்திருந்தோம். அந்தக் கதை வேற. அதற்குப் பிறகு ஆக்ஷன் பாணியில் எடுக்கலாம் என்று நினைத்து போட்டோ சூட் எல்லாம் எடுத்திருந்தோம். எல்லாம் முடிந்த பிறகு சூர்யா, எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், ஏதோ ஒன்று மிஸ் ஆகுது என்று சொன்னார். அப்பதான் என்னுடைய அப்பா தவறிவிட்டார்.

View this post on Instagram

A post shared by Suren Nallathambi (@stories.behind_mask)

வாரணம் ஆயிரம் படம் உருவான விதம்:

அவரை குறித்து நான் நிறைய விஷயங்களை பகிர்ந்து இருந்தேன். பின் எனக்கும் என்னுடைய அப்பாவுக்கும் இடையேயான உறவு குறித்து வைத்து எழுதலாம் என்று கதை எழுதி சூர்யாவிடம் சொன்னேன். அவரும் சூப்பராக இருக்கிறது. இதுதான் மிஸ் ஆகி இருந்தது. இப்படியே எடுக்கலாம் என்று நான் கதை சொன்னவுடன் எழுந்து நின்று கைதட்டினார். அதற்குப் பிறகுதான் வாரணம் ஆயிரம் படத்தை எடுத்தோம் என்று கூறியிருந்தார்.

கௌதம் மேனன் குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் உதவியாளராக இருந்து மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார் கௌதம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

கௌதம் மேனன் படங்கள்:

சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த படம் ஜோஷ்வா இமை போல் காக்க. இந்த படம் ஆக்சன் திரல்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது கௌதம் மேனன் நடித்தும் இயக்கியும் வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full