ட்விட்டரில் பயங்கர கேலிக்கு உண்டான கௌதம் மேனன்.! காரணம் இதான்.!

By Rajkumar · 31/1/2019

சாக்லேட் பாய் மாதவன் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான 'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கௌதம் மேனன். அதன் பின்னர் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

https://twitter.com/srinikesh17/status/1090482227647934464

தமிழில் முன்னணி நடிகர்களான கமல், சூர்யா, சிம்பு என்று பலரை வைத்து படமெடுத்துள்ளார். ஆனால், முதன் முறையாக விக்ரமை வைத்து 'துருவ நட்சதிரம் ' என்ற படத்தை பல ஆண்டுகளாக இயக்கி வருகிறார். அதே போல தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்ட' படமும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் ரவி மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள 'சர்வம் தாளமயம்' படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.

https://twitter.com/mikekannan3/status/1090482860320993280

https://twitter.com/Ganesdhanush/status/1090482470238138368

இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் முதலில் நீங்கள் எடுக்கும் 'துருவ நட்சத்திரம்' படம் எப்போது வெளியாகும் என்று முதலில் சொல்லுங்க என்றும், தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்ட எப்போது வெளியாகும் என்றும் கௌதம் மேனனை வறுத்தெடுத்து விட்டனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full