அந்த படத்துல நடிச்சது தான் நான் பண்ண பெரிய தவறு - நடிகர் கெளதம் கார்த்திக் எமோஷனல்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் ராம் கார்த்திக். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இருந்தாலும் இவரால் தமிழ் சினிமாவில் உச்சத்தை அடைய முடியவில்லை. தற்போது இவர் மனு ஆனந்த் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் படம் மிஸ்டர் எக்ஸ்.
இந்த படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், அதுல்யா ரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகர் கௌதம் ராம் கார்த்திக், முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அதை என்னுடைய திரை உலக பணத்தில் பெரிய தவறாக பார்க்கிறேன்.
கௌதம் கார்த்தி பேட்டி:
அந்த சமயத்தில் புரிதல் இல்லாமல் தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அது என்னுடைய திரை வாழ்க்கையில் பெரிய தோல்வியாக அமைந்தது. அந்த படத்துக்கு பிறகு அது மாதிரியான படங்களை நான் முழுமையாக தவிர்த்து வருகிறேன். ஒரு கட்டத்தில் மீண்டும் முயற்சிக்கலாம் என்று முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் படத்தில் நடித்தேன். இப்போது கூட முழுமையான மாஸ் படங்களில் நடிக்க பயமாக இருக்கிறது என்று கூறுகிறார்.
முத்துராமலிங்கம்:
இயக்குனர் ராஜதுரை இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் முத்துராமலிங்கம். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், நெப்போலியன், பிரியா ஆனந்த் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தை விஜய் பிரகாஷ் தயாரித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை