திருப்பதியில் மொட்டை, நெற்றியில் நாமத்தோடு காயத்ரி ரகுராம் கொடுத்த போஸ் - என்ன இப்படி ஆகிட்டாங்க.
திருப்பதி மொட்டை, நாமத்துடன் இருக்கும் காயத்ரி ரகுராமின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் ஆவார். மேலும், இவர் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.
அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும், இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவர் அரசியலில் குதித்தார். பல ஆண்டுக்கு முன்னரே காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார்.
காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:
குறிப்பாக, காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. அதோடு கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது.
விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் சந்திப்பு:
இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பின் கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தினமும் டீவ்ட் செய்து வந்திருக்கிறார். இதனை அடுத்து காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைமில் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இவர் விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து பேசி இருந்தது சோசியல் மீடியா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காயத்ரி ரகுராம் புகைப்படம்:
அது மட்டும் இல்லாமல் இவர் சோசியல் மீடியாவில் இவர் பதிவிட்டு வரும் கருத்துகள் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவருடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. அதாவது, காயத்ரி ரகுராம் அவர்கள் சமீபத்தில் திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். பின் மொட்டை அடித்துக் கொண்டு நெற்றியில் நாமத்துடன் இருக்கும் புகைப்படத்தை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்து பலருமே தலைவிக்கு செம கெத்து என்றெல்லாம் கூறி லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.