அஜித் இப்படி ஒரு கேவலமான ரீமேக் படத்துல நடிச்சதே தப்பு - ரசிகரின் கமென்டிற்கு காயத்ரி பதிலடி.

By Arun · 10/8/2023

அஜித்தை விமர்சித்து பதிவிட்டு இருக்கும் டீவ்ட்டுக்கு விஜய் சேதுபதி பட நடிகை கொடுத்திருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அஜித் குறித்து ஏதாவது ஒரு அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் அஜித்தை திட்டி நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

நேர்கொண்ட பார்வை படம்:

மேலும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து இருந்தார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யா பாலன் நடித்து இருந்தார். இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’படத்தின் ரீமேக். இந்த நிலையில் இந்த படம் குறித்து நெட்டிசன் ஒருவர் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், நடிகர் அஜித் தனது சினிமா பயணத்தில் எடுத்த தவறான முடிவு ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரீமேக். அது முழுக்க முழுக்க ஏ செண்டர் பார்வையாளர்களுக்கான படம்.

நெட்டிசன் பதிவு:

குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றி அவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸை கொண்டு வந்தது. அதற்கு பிறகு இந்தப் படத்தில் நடித்தது அவருக்கு பின்னடைவு. குறிப்பாக, 'நேர்கொண்ட பார்வை’ படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட கமர்ஷியல் காட்சிகள் சுத்தமாக செட் ஆகவில்லை’ என்று கூறி இருக்கிறார். இதை பார்த்த நடிகை காயத்ரி அவர்கள், ஒரு படத்தின் வெற்றிக்கு பாக்ஸ் ஆஃபிஸ் என்பதை மட்டுமே அளவுகோலாக வைக்கக் கூடாது.

காயத்ரி பதிவு:

அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. இனிமேலும் அது தொடரும்’ என்று பதிலடி கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் துணிவு. இந்த படத்தை வினோத்குமார் இயக்கியிருந்தார்.

விடாமுயற்சி படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தந்திருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ்ந்திருமேனி இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full