தான் ஆசைப்பட்டது போலவே நடிகை காயத்ரி மொட்டை அடித்துக்கொண்டு ஆளே மாறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் காயத்ரி. இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான்.இந்த படத்தின் மூலம் காயத்ரி வேற லெவல் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம்.

அதனை தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் அதிகம் விஜய் சேதுபதி உடன் தான் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமனிதன்.இந்த படத்தில் காயத்ரி அவர்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்திருந்தார்.

Advertisement

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் பகத் பாசனின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டிருந்தது.

மேலும், விக்ரம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து காயத்ரி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் காயத்ரி தனது ஒருபக்க முடியை மட்டும் ஷார்ட்டாக வைத்துக்கொண்டு வித்யாசமான கெட்டப்பில் இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் ‘ தனக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்பது ஆசை.

Advertisement

ஆனால், அடுத்தடுத்து படங்களில் நடிப்பதால் என்னால் மொட்டை அடிக்க முடியாமல் போனது. தற்போது கொஞ்சம் பிரீயாக இருப்பதால் நான் கொஞ்சம் மட்டும் என் முடியை ஷார்ட்டாக வைத்துக்கொண்டேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் காயத்ரி தனது முடியை மொத்தமாக ஷார்ட் செய்து கொண்டு படு வித்யாசமான கெட்டப்பில் மாறி இருக்கிறார். அந்த புகைபடம்களையும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement
Advertisement