'இனி இவருக்கு பதில் இவர்' மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகிய முக்கிய மகள் - இதான் காரணம்.
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து காயத்ரி யுவராஜ் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் மீனாட்சி பொண்ணுங்க. ஆண் துணை இல்லாமல் தன்னுடைய மூன்று பெண்களையும் கௌரவமாக சம்பாதித்து வளர்த்து வருபவர் தான் மீனாட்சி.
இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த சீரியலில் மீனாட்சி பெண்களில் ஒருவராக யமுனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் காயத்ரி யுவராஜ். சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் இவர் முறையாக நடனமும் கற்றுக் கொண்டார்.
காயத்திரி குறித்த தகவல்:
பின் இவர் தன்னுடைய கணவர் யுவராஜின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடியதன் மூலம் தான் விஜய் டிவிக்கு அறிமுகமானார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்தார். இவர் அதிகம் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார் என்று சொல்லலாம்.
காயத்திரி நடித்த சீரியல்கள்:
மேலும், இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று இருக்கிறார். இவர் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் சன் டிவியில் மிகப்பிரபலமான சீரியலான சித்தி 2 தொடரிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படி படு பிஸியான காயத்ரி அவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
காயத்திரி கர்ப்பம்:
இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது காயத்ரி யுவராஜ் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இதை அவரே சோசியல் மீடியாவில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு சொல்லி இருக்கிறார். மேலும், இவர் கர்ப்பமாக இருந்தும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் காயத்ரி டெலிவரி டேட் நெருங்கி வருவதால் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.
சீரியலில் விலகிய காயத்திரி:
தற்போது இவருக்கு பதில் யமுனா கதாபாத்திரத்தில் காவியா பெல்லு என்பவர் நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய மலையாள தொடர்களிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாக இருக்கிறார். இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை வரும் காலங்களில் பார்க்கலாம்.