வலிமை படத்தில் ஜெய் ஷங்கர், வாரிசு படத்தில் இந்த நடிகரா ? வாரிசு பட ட்ரைலரில் இத நோட் பண்ணீங்களா ?

By Arun · 5/1/2023

விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரைலரில் பழம் பெரும் நடிகரின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். பொங்கல் திருவிழாவிற்கு வெறும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலையில் ஜில்லா மற்றும் வீரம் வெளியாகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் மோத இருக்கின்றன. அதாவது விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒரே நேரத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இரு படங்களின் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படியிருக்கும் போது துணிவு படத்தின் ட்ரைலர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் துணிவு படத்தின் ட்ரைலரில் விஜய் முன்னதாக நடித்த இயக்குனர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்று விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தது.

துணிவு ட்ரைலர் செய்த சாதனை :

இப்படி ஒரு நிலையில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியான போது அது பீஸ்ட் படம் போல இருக்கிறது என்று பலரும் கேலி செய்து வந்தனர். இருப்பினும் துணிவு படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, யூடியூபில் டிரெண்டானது. இதனால் பார்வைகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில், 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்ததாக படக்குழு வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்ததது.

ட்ரைலர் தாமதத்திற்கு காரணம் :

முன்னதாக 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியிருந்த நிலையில் அந்த சாதனையை தற்போது அஜித்தின் ;துணிவு' படம் தொட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் வாரிசு படத்தின் ட்ரைலரை எதிர் நோக்கி காத்துக்கொண்டு இருந்தனர். வாரிசு படத்தின் ட்ரைலர் தாமத்மானதற்கு காரணம் சென்சார் தான் என்று கூறப்பட்டது.

வாரிசு சென்சார் சான்றிதழ் :

துணிவு படம் 22 மணிநேரம் 23 நிமிடங்களும், வாரிசு 2 மணிநேரம் 48 நிமிடங்களும் இருக்கும் என்று தகவல் வெளியாகிய நிலையில் வாரிசு படத்தின் நிறைவு வேலைகள் தாமதமானது. இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்சார் சான்றிதழும் வெளியானது. இதில் வாரிசு பாடத்திற்கு U சான்றிதழும் துணிவு படத்துக்கு U/A சான்றிதழும் வழங்கப்பட்டு இருந்தது.

துணிவு சாதனையை முறியடிக்குமா :

பொதுவாக அஜித் படங்களின் அப்டெட்டுகள் தான் தாமதமாகும் ஆனால், இம்முறை துணிவு படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியானது. ஆனால், வாரிசு படம் வெறும் புகைப்பட அப்டேட்டுகளுடன் மட்டும் விட்டுக்கொண்டு ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இப்படி ஒரு நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

சமீப காலமாக புதிய திரைப்படங்களில் மறைந்த திரைக்கலைஞர்களை புகைப்படம் வாயிலாக கதாப்பாத்திரமாக்கி மீண்டும் பயன்படுத்திக்கொள்ளும் முறை ஆரோக்கியமானதாக இருக்கிறது. அவர்களை நினைவுப்படுத்துவது போல் அமையும். ‘வலிமை’ படத்தில் அஜித்தின் தந்தையாக ஜெய்ஷங்கர் புகைப்படத்தைக் காட்டியிருந்தார்கள். அந்த வகையில் ‘வாரிசு’ படத்தில் ‘ஜெமினி கணேசன்’ புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full