மூன்று படம் ரீ-ரீலீஸ் ஆகியும் விஜய்யின் ஒற்றை படத்தின் கலக்ஷனை நெருங்காத அஜித் படங்கள்.

By subhashini · 4/5/2024

சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் படங்கள் திரையரங்களில் வெளியிடப்பட்டு வருகிறது. பிரபலமான நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த படங்களை மீண்டும் ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த கில்லி படமும் ரிலீஸ் செய்யப்பட்டது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

விஜய் கில்லி படம்:

பெரும்பாலும் படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களில் நிறுத்தி விடுவார்கள். ஆனால், கில்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு பில்லா, தீனா படங்களை ரிலீஸ் செய்திருந்தார்கள். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் 2001 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகியிருந்தது.

அஜித் ரீ ரீலிஸ் செய்யப்பட்ட படம்:

இந்த படத்தில் அஜித்துடன் மலையாள நடிகர் சுரேஷ் கோபி, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். அதோடு இதுதான் ஏ ஆர் முருகதாஸின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதோடு இந்த படத்தில் தான் முதன்முதலாக அஜித்தை தல என்று அழைக்க ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து தற்போது வரை அஜித்தை தல என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். தீனா படம் வெளியாகி 23 ஆண்டுகள் கடந்து இருக்கிறது.

அஜித் ரசிகர்கள் செய்தது:

மேலும், 2007 ஆம் ஆண்டு இயகுனர் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் அஜித் நடித்த மாசான படம் பில்லா. இந்த படமும் அஜித்திற்கு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் மங்காத்தா படத்தை வெளிநாட்டில் மட்டும் ரிலீஸ் செய்திருந்தார்கள். சென்னையில் காசி திரையரங்கில் தீனா படம் ரிலீஸ் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டிருந்தது. அப்போது அஜித் ரசிகர்கள் கில்லி படத்தினுடைய பேனரை கிழித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் கில்லி படம் திரையிடப்பட்ட திரையரங்கின் கதவை எல்லாம் திறந்து சத்தம் போட்டு கூச்சலிட்டு இருக்கிறார்கள்.

ரீ ரிலீஸ் வசூல் விவரம்:

பின்பு காசி திரையரங்கம் முன்பு, சென்னையினுடைய முக்கிய சாலைகளிலும் அஜித் ரசிகர்கள் சூழ்ந்து பயங்கர ஆர்ப்பாட்டம் செய்து இருந்தால் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரிலீஸ் ஆன விஜய்- அஜித் நடிகர்களின் பாக்ஸ் ஆபீஸ் குறித்த விபரம் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. வெளியான முதல் நாளே கில்லி படம் 8 புள்ளி 3 கோடி வசூல் செய்திருக்கிறது. அஜித்தின் தீனா படம் 75 லட்சம், பில்லா படம் 55 லட்சம், மங்காத்தா 85 லட்சம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கில்லி படம் செய்த வசூல் சாதனையை அஜித்துடைய மூன்று படங்களும் செய்யவில்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full