பருத்திவீரன் பஞ்சாயத்து, ஒட்டுமொத்தமாக திரும்பிய திரையுலகம் - மன்னிப்பு கேட்டு ஞானவேல் வெளியிட்ட அறிக்கை.

By Arun · 29/11/2023

கடந்த சில தினங்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் அமீரின் பஞ்சாயத்து தான் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருக்கிறது. இயக்குனர் அமீரால் பருத்திவீரன் படத்தில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஞானவேல் ராஜா குற்றம் சாட்டி இருந்தார். மேலும், அமீர் செலுத்திய குற்றச்சாட்டிற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நந்தா படத்தின் படப்பிடிப்பில் தான் சூர்யா- அமீர் இடையே நட்பு ஏற்பட்டது. அதனால்தான் அமீருக்காக மௌனம் பேசியதே படத்தில் சூர்யா நடித்து கொடுத்தார். ஆனால், அமீர் இயக்குனரானதும் பேச்சில் மாற்றம் தெரிந்தது.

https://www.youtube.com/watch?v=SlcGRo05Ikg

இதனால் சூர்யா மௌனம் பேசியதே இசை வெளியீட்டு விழா கூட வரவில்லை. அதேபோல் பருத்திவீரன் படத்தை நானாக தயாரிக்கவில்லை. அதுவும் அமீருக்காக தான். அமீர் என்னிடம் பல லட்சங்கள் கடன் வாங்கி இருக்கிறார். அதனை கொடுக்க முடியாமல் தான் பருத்திவீரன் படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவர் இயக்கி கொடுப்பதாக சொன்னார்.அப்போது கூட அமீர் மீது கார்த்திக்கு நம்பிக்கையே இல்லை.

நானும் சூர்யாவும் சேர்ந்துதான் பருத்திவீரன் கதையை கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று கார்த்தி இடம் சொல்லி புரிய வைத்தோம். அதேபோல் சுமார் 2 கோடி பட்ஜெட்டில் ஃபர்ஸ்ட் காபி தருவதாக சொல்லிவிட்டு இரண்டு வருடங்களில் 4 கோடி வரை செலவு செய்தார். அப்போது அமீர் பருத்திவீரன் எடுத்த பட்ஜெட்டில் 4 படங்களை தயாரித்திருக்கலாம். இப்போதும் அவர் சொன்னால் எத்தனை பேர் முன்னிலையிலும் பருத்திவீரன் பிரச்சனை குறித்து நான் பேச தயார்.

https://www.youtube.com/watch?v=xm8ETssU0FI

இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என சிவகுமாரன் நினைத்தார். ஆனால் அவரையும் இந்த பிரச்சனையில் இழுத்து விட்டார். இது நியாயமே கிடையாது. அவர் தன்னை இயக்குனர் பாரதிராஜா போல் நினைத்து இருக்கிறார். அவருக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது. இனி அமீர் இந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டே இருந்தால் நானும் விடமாட்டேன் பதிலடி கொடுப்பேன் என்று கோபமாக கொந்தளித்து பேசி இருந்தார்.

அமீரை திருடன் என அவர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் இந்த பேச்சுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், அமீர் பற்றி தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பருத்திவீரன் படத்தின் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்துகொண்டு இருகிறது.

https://twitter.com/GeethanReporter/status/1729739562048454986

இதுநாள் வரை அதை பற்றி நான் பேசியது கிடையாது. என்றைக்குமே அவரை நான் அமீர் அண்ணா என்று தான் அழைப்பேன். ஆரம்பித்தில் இருந்தே அவர் குடும்பத்தினருடன் நெருங்கிய பழகி இருக்கிறேன். சமீபத்திய பேட்டிகளில் என்ன குறித்து அவர் கூறிய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது.அதற்கு பதிலளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அமீர் அண்ணன் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்

Tamil Behind Talkies AMP · Quick view
View full