விஜய் பெரிய ஸ்டாராக இருப்பதற்கு இதுதான் காரணம்- கோட் பட நடிகை மீனாட்சி சொன்ன விஷயம்
விஜய் குறித்து கோட் பட நடிகை கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ பட படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் என்பது அனைவரும் தெரிந்தே. கடைசியாக லியோ படத்திற்கு இவர் 120 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். ஆனால், இந்த கோட் படத்தில் அப்படியே பல மடங்கு உயர்த்தி இருக்கிறார்.
கோட் படம்:
இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதனால் தற்போது படத்திற்கான பிரமோஷன் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பட ப்ரோமோஷன் விழாவில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி, சினேகா, லைலா, பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் நடிகை மீனாட்சி சவுத்திரி, எனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
விழாவில் மீனாட்சி:
என்னுடைய கேரியர் ஆரம்பத்திலேயே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. விஜய் சார் ரொம்ப அமைதியானவர். அவர் எப்போதுமே ஜென் நிலையில் தான் இருப்பார். சூட்டிங் நடக்கும் சரியான நேரத்திற்கு விஜய் வந்துவிடுவார். அதோடு சூட்டிங் ஆரம்பித்தாலே போதும் அவர் வேற மாதிரியான ஒரு நபராக இருப்பார். கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி மாறிவிடுவார். விஜய் மாதிரியான ஒரு நபரை இதற்கு முன்பு நான் பார்த்ததே இல்லை.
https://www.youtube.com/watch?v=krZpl8ofPi0
விஜய் குறித்து சொன்னது:
அவ்வளவு டிசிப்ளின் மற்றும் டெடிகேஷன் உடன் நடந்து கொள்வார். அதனால் தான் அவர் மிகப் பெரிய ஸ்டாராக இருக்கிறார். விஜய் சாருடன் இணைந்து நடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருடன் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு படக்குழுவினருக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இந்த கோட் படத்தில் இருந்து 4 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இந்த முறை இசை வெளியீட்டு விழா இல்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.