'யாரு கிட்ட' இப்படி ஒரு பாட்ட தான கேட்டீங்க - இதோ GOAT படத்தின் நான்காம் பாடல்
கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் சாதனையும் செய்து இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கோட் படத்தின் நான்காவது பாடல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தினுடைய மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
கோட் படம்:
இதை அடுத்து நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. இந்த பாடல் நிறுவனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை அடுத்து சமீபத்தில் மூன்றாவது பாடலான ‘ஸ்பார்க்’ வெளியாகி இருந்தது.
நான்காவது பாடல்:
இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடல் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நான்காவது பாடல் வெளியாகி இருக்கிறது. மச்சி கெடா மஞ்ச சட்ட மம்டி வரான் பள்ளம் வெட்ட என்ற வரிகளில் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விவேக் எழுதி இருக்கிறார். விவேக் அவர்கள் விஜய்க்கு நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விஜயின் உடைய கட்சி பாடலையும் விவேக் தான் எழுதி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=8bfH0EYn0Pg
படம் குறித்த தகவல்:
மேலும், இந்த பாடல் தொடர்பாக பாடலாசிரியர் விவேக், என்னுடைய பேவரட் வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். இந்த பாடல் உடைய வரிகள் ரொம்ப மாசாக இருக்காது. ஆனால், தளபதி விஜய் இந்த பாடலை மாசாக தரம் உயர்த்த போகிறார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
Super thrilled to work with one of my most fav @vp_offl sir and the man who created his own destiny legendary @thisisysr sir
— Vivek (@Lyricist_Vivek) August 30, 2024
Lyrically, song is not in Full Mass space. But who cares. Thalapathy is going to elevate it🔥 Vp-U1💥
Just like old times, couple of lines for you soon🤗
மட்ட பாடல்:
தற்போது இந்த படத்தினுடைய இறுதிகட்ட பணிகள் முடிவடைகிறது. மேலும், படத்தினுடைய புரமோஷனுக்காக படக்குழுவினர் பிசியாக இருக்கிறார்கள். இன்று கோட் படத்தின் நான்காவது பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு 'மட்ட' என்னும் தலைப்பு வைத்திருக்கிறார்கள். கோட் படத்தின் முதல் மூன்று பாடல்கள், மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'மட்ட பாடல்' நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலைப் பார்த்தவுடன் விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் இந்த பாடலை கொண்டாடி வருகிறார்கள். தற்போது இந்தப் பாடல் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.