இயக்குனர் விஜய் மீட்டான் இயக்கத்தில், 2014 ஆம் ஆண்டு கோலி சோடா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் எடுத்துள்ளார் இயக்குனர் விஜய் மில்டன்.

Advertisement

இந்த படத்தில் சமுத்திரக்கனி, இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலி சோடா படத்தின் முதல் பாகத்தை போலவே இந்த படமும், வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒரு மூன்று இளைஞர்களின் கதையை பற்றியது தான்.

கஷ்டப்படும் மூன்று இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல இடத்தில் வர வேண்டும் என்று உழைத்து வருகின்றனர். அவர்கள் மூவருக்கும் சமுத்திரக்கனி உதவி வருகிறார். அதுபோக ஒரு பக்கத்தில் இவர்கள் மூவரும் ஆளுக்கொரு பெண்ணை காதலித்து வருகின்றனர். பின்னர் வழக்கம் போல சில எதிரிகள் இவர்கள் மூவரின் வாழ்க்கையில் தனித்தனியே பிரச்சனை கொடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

முதல் பாதியில் இந்த மூன்று இளைஞர்களும் சாந்தமாக அவர்கள் கொடுக்கும் தொல்லைகளை பொறுத்துக்க கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு சமுத்திரக்கனி அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறார். பின்னர் படத்தின் இரண்டாம் பாதியில் இந்த மூன்று இளைஞர்களும் ஒன்றாக இணைந்து பொறுத்தது போதும் பொங்கி எழு என்று அதிரடியில் இறங்குகின்றனர். பின்னர் அவர்களை வீழ்த்தி பிரச்சனையில் இருந்து வெளிவருகிறார்களா என்பது தான் கதை.

கிட்டத்தட்ட கோலி சோடா முதல் பாகத்தின் கதையை போன்று இருந்தாலும், இந்த படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சண்டை காட்சிகள் படு ஓவராக உள்ளது. மேலும், இந்த படத்தின் முதல் பதியிலேயே இரண்டாம் பாதியில் என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் யூகித்து விட முடிகிறது.

படத்தின் நிறை மற்றும் குறை

இந்த படத்தின் ப்ளஸாக விஜய் மில்லடன் தேர்ந்தெடுத்திற்கும் நடிகர்களை கூறலாம், இந்த படத்தில் வரும் 3 இளைஞர்களின் நடிப்பும் மிக அற்புதமாக உள்ளது. அதிலும் குறிப்பாக அனுபவ நடிகரான சமுத்திரகனியின் தேர்வு படத்திற்கு கூடுதல் பலம். மேலும், படத்தின் இசை ஓரளவுக்கு ஓகே. ஆனால், சண்டை காட்சிகள் எதார்த்தம் குறைந்து கொஞ்சம் ஓவராக இருக்கிறது. படத்தில் வில்லன்கள் மற்றும் கதாநாயகிகலின் பங்கும் கொஞ்சம் குறைவு தான். ஆனால், படத்தை ஆக்ஷன் பட ரசிகர்கள் ஒரு முறை பார்க்கலாம்.

Advertisement