தன் அம்மாவை நினைத்து புலம்பும் கோமதி, அப்பத்தா செய்த வேலை- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 23/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் பண விஷயத்தில் தவறு செய்தார் என்று கோமதி-பாண்டியன் கோபத்தில் இருக்கிறார்கள். கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் சண்டை நடந்தது. சக்திக்கு திருமணமாகவில்லை என்று அவரின் அப்பா சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனால் வீட்டில் கலவரமே வெடித்தது. ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்லி கொண்டு இருந்தார்கள். இதனால் பெண்கள் எல்லோருமே கோபப்பட்டு பேச, ராஜியின் அப்பா அவருடைய மனைவியை அடிக்க போனார்.

இதை எல்லாம் பார்த்து அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்து கீழே விழுந்தார். உடனே அவரை மொத்த குடும்பமும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது. இன்னொரு பக்கம் ராஜி, வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரியாமல் பயத்தில் கோமதி இடம் சொல்லி புலம்பி இருந்தார். இந்த வாரம் ஹாஸ்பிடலில் அப்பத்தாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவர்கள் சரியான பதில் கொடுக்கவில்லை. இதனால் எல்லோருமே பயத்தில் அழுது புலம்பி கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இந்த விஷயத்தை பழனிக்கு சொல்ல, அவர் ஹாஸ்பிடலிலேயே கதறி கதறி அழுதார். பின் பழனி இடம் நடந்ததை வீட்டுப் பெண்கள் சொல்ல, அவர் பயங்கரமாக கத்தி கோபப்பட்டார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில், என்ன நடந்தது? என்று புரியாமல் ராஜி- கோமதி இருவருமே புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். நேற்று எபிசோட்டில், வீட்டில் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் ராஜி அப்பா, அம்மா சித்தப்பா எல்லோருமே கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. அவர் கண்விழித்து பார்த்து டாக்டரிடம், டென்ஷனில் மயங்கி விழுந்து விட்டேன். தயவு செய்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள் என்று சொல்ல டாக்டரும் ஒத்துக் கொள்கிறார். பின் அனைவரும் அப்பத்தாவை பார்த்து நலம் விசாரித்தார்கள். கோமதி, உனக்காக இவரை தூக்கிப் போட்டு வந்து விட்டேன் அம்மா. ஆனால், இப்போது உனக்காக இவர் எனக்கு வேண்டாம் என்று புலம்ப பாண்டியன் அதிர்ச்சியாகிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலில் மருமகள் இரண்டு பேருமே மாமியார் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அப்பத்தா உண்மையை சொன்னவுடன் அவர்களும் அவருடைய டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். பின் தன்னுடைய கணவர்மார்களை உள்ளையே விடாமல் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய மாமியாருடன் ஜாலியாக கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அழுகையை நிறுத்தி விடுகிறார். உடனே பாண்டியன், எல்லோரும் போய் சமைக்கும் வேலையை பாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இது எல்லாம் பார்த்து செந்தில்- கதிர் இருவருக்கும் கோபம் வருகிறது. அப்போது தங்கமயில் கோமதியிடம் பேச வரும்போது அவர் முகத்தில் அடித்தது போல பேசி விடுகிறார். இதனால் வேதனையில் தங்கமயில் உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full