குட் பேட் அக்லி : படத்தில் அஜித்தின் மகனாக நடித்தவர் இவர் தான் - முழு விவரம் இதோ

By subhashini · 12/4/2025

அஜித் பற்றி குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடித்தவர் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி படம்:

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருக்கிறார்கள். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் இந்திய அளவில் குட் பேட் அக்லி படம் 28.5 கோடி வசூல் செய்திருக்கிறது.

அஜித் மகன்:

மேலும், இந்த படத்தில் அஜித்தின் மகனாக நடித்திருந்தவர் கார்த்திகேயா தேவ். இந்த நிலையில் இவரைப் பற்றி பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் ஒரு தெலுங்கு நடிகர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த சலார் என்ற படத்தில் சிறு வயது பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகியிருந்த எம்ரான் படத்திலும் கார்த்திகேயா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கார்த்திகேயா தேவ் பதிவு:

அதற்குப்பின் சந்தீப் நடிப்பில் வெளியாகியிருந்த மட்கா என்ற தெலுங்கு படத்திலும் கார்த்திகேயா தேவ் நடித்திருந்தார். தற்போது இவர் குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக கார்த்திகேயா தேவ் போட்ட பதிவில், அஜித்துடன் பணியாற்றிய அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு சிறப்பான அனுபவம். அவர் ஒரு நூலகம்.

அஜித் பற்றி சொன்னது:

அவருடன் பணியாற்றியதை நான் பெரிய சாதனையாக பார்க்கிறேன். முதல் நாள் முதல் தருணம் முதல் படத்தின் வெளியீடு வரை உங்கள் அர்ப்பணிப்பு வியக்க வைக்கிறது. உங்களுடைய அர்ப்பணிப்பையும் ஆர்வமும் இன்றைய இளைய தலைமுறைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று. நீங்கள் எனக்கு காட்டிய அன்பு மரியாதையும் மறக்கவே முடியாது. ஐ லவ் யூ சார் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full