முடிவுக்கு வந்த 'குட் பேட் அக்லி'ஆட்டம், பாக்ஸ் ஆபிஸ் வெளியிட்ட மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தின் மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது.
இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படம்:
அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
இப்படி இருக்கும் நிலையில் குட் பேட் அக்லியின் மொத்த வசூல் குறித்த விவரம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது குட் பேட் அக்லி படம் வெளியாகி கடந்த மூன்று வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வந்திருக்கின்றது. வரும் மே 1ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ, சசிகுமார் டூரிஸ்ட் பேமிலி படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனால் பெரும்பாலான திரையரங்கில் இருந்து குட் பேட் அக்லி படம் தூக்கப்படுவதாக கூறப்படுகிறது.
படத்தின் வசூல்:
அதே போல் ஒரு சில தினங்களில் மட்டும் தான் இந்த படம் தொடர்ந்து ஓடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
மேலும், இதுவரை உலக அளவில் குட் பேட் அக்லி படம் 280 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸின் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுவரை வெளியான அஜித் படத்திலேயே அதிக வசூல் செய்த சாதனையை குட் பேட் அக்லி தான் பெற்றிருக்கிறது. ஆனால், இந்த படம் 500 கோடி தாண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
படத்தின் கதை:
படத்தில் அஜித் இந்தியாவே நடுங்கும் அளவுக்கு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஆக இருக்கிறார். அந்த வேலையால் அஜித்தினுடைய குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வருகிறது. இதனால் திரிஷா மனம் உடைந்து தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை கூட பார்க்க விடாமல் திரிஷா தடுக்கிறார். இதனால் அஜித் போலீஸிடம் சரண்டர் ஆகி விடுகிறார். பின் 17 வருடம் கழித்து தன்னுடைய கேங்ஸ்டர் தொழில் எல்லாம் விட்டுட்டு தன்னுடைய மகனை பார்க்க அஜித் வருகிறார். அப்படி வரும்போது அஜித் உடைய மகனை அர்ஜுன் தாஸ் போலீஸ் இடம் ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்க வைத்து விடுகிறார். இதனால் நன்றாக இருந்த அஜித் மீண்டும் வில்லனாக மாறுகிறார். அர்ஜுன் தாஸ் ஏன் அஜித்துடைய மகனை ஜெயிலுக்கு அனுப்பினார்? அதற்கான காரணம் என்ன? தன் மகனை ஜெயிலில் இருந்து அர்ஜுன் மீட்டாரா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.