5 கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும் - இளையராஜா வைத்த குற்றச்சாட்டுக்கு 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்

By subhashini · 16/4/2025

இளையராஜா அனுப்பிய நோட்டீஸ்க்கு குட் பேட் அக்லி பட தயாரிப்பாளர் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விடா முயற்சி’.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைபெற்றது. இந்த படம் மொத்தமாக 150 கோடி வரை வசூல் செய்து இருக்கிறது. தற்போது நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி படம்:

இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. அஜித்தின் பேன் பாயாக ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படம் தாறுமாறாக இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வரியா நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு அடார் லவ் படத்திற்கு பிறகு மீண்டும் இந்த படத்தின் மூலம் பிரியா வாரியார் இளசுகள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனார் என்று சொல்லலாம். இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் இளமை இதோ இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற பாடல்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=M-N0MALT9Fs

இளையராஜா நோட்டீஸ்:

இது இளையராஜாவின் உடைய பாடல்கள். மேலும், தன்னுடைய பாடல்களை குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அதில் அவர், தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் படத்தில் பயன்படுத்தியதற்காக ஐந்து கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அந்த பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் விளக்கம்:

இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் விளக்கமளித்திருக்கிறார். அதில் அவர், படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தியதில் எந்த தவறும் செய்யவில்லை. விதிகளின்படி அனுமதி தான் வாங்கி இருக்கிறோம். படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு தேவையான எல்லா அனுமதிகளையும் இசையில் லேபில்களிடமிருந்து வாங்கி இருக்கிறோம். அந்த உரிமைகள் அனைத்துமே லேபில்களுக்கே சொந்தமானது. நாங்கள் சரியான முறையில் அவர்களிடமிருந்து அனுமதி வாங்கி தான் செயல்பட்டோம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full