இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமே முடிச்சிட்டாங்க - குட் நைட் அனுவின் திருமண கிளிக்ஸ்.

By Rajkumar · 18/3/2024

குட் நைட் பட நடிகையின் திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் மீதா ரகுநாத். இவர் முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தர்புகா சிவா இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது.

ந்த படம் பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருந்தார். இந்த படம் பள்ளிப்பருவ நினைவுகளை தூண்டும் வகையில் இருந்ததாக பலருமே கூறியிருந்தார்கள். மேலும், இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவருக்கும் கிஷன் தாசுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

மீதா ரகுநாத் திரைப்பயணம்:

முதலும் நீ முடிவும் நீ படத்தின் வெற்றிக்கு இவர்களின் கெமிஸ்ட்ரி ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த படத்தில் ஸ்கூல் பெண், குடும்ப பெண் என்று இரண்டு பரிமாணங்களில் மீதா ரகுநாத் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து இவர் குட்நைட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகன் மணிகண்டன் நடித்து இருந்தார்.

குட்நைட் படம்:

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் நைட். பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குட் நைட் படமும் ஒன்று.

மீதா ரகுநாத் திருமணம் :

கணவனுக்காக எதையும் சகித்துக் கொள்ளும் ஒரு அப்பாவி பெண்ணாக இந்த படத்தில் மீதா ரகுநாத் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இவருக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகிவந்தது. ஊட்டியில் மீதா ரகுநாத் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்று இருந்தது .

View this post on Instagram

A post shared by Meetha Raghunath (@the.meethling)

ரசிகர்கள் வாழ்த்து:

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இவருடைய நிச்சயதார்த்தத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றுஇருந்தார்கள். மேலும், தனது வருங்கால கணவருடன் நடிகை மீதா ரகுநாத் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில்வைரலானது. இப்படி ஒரு நிலையில் நேற்று இவரின் திருமணம் சிம்பிளாக முடிந்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை சொன்னாலும் சிலர் இப்பதான் நீங்கள் நடிக்க வந்தீர்கள் அதுக்குள்ள திருமணமா? இனி நடிக்க மாட்டீர்களா? என்றெல்லாம் ஷாக் ஆகி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full