காமெடி கிங்கின் 964 வது படம், ஓகே சொன்ன Sk - கவுண்டர் பிறந்தநாளில் தரமான அப்டேட்

By subhashini · 25/5/2023

கவுண்டமணி நடிக்க இருக்கும் புது படத்தின் அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடியில் ஜாம்பவனாகவும், சக்கரவர்த்தியாகவும் திகழ்ந்தவர் கவுண்டமணி. அன்றும் இன்றும் என்றும் இவருடைய காமெடிக்கு எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். காமெடி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் முதலில் ஞாபகத்தில் வருவது கவுண்டமணி பெயர் தான். அந்தளவிற்கு தன்னுடைய நகைச்சுவை திறமையின் மூலம் மக்களை தன்வசம் படுத்தியுள்ளார்.

மேலும், இவருடைய கவுண்டர்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர். இவர் ரஜினி, கமல் காலம் தொடங்கி தற்போது உள்ள நிறைய நடிகர்கள் வரை என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் தனியாக தான் படங்களில் கலக்கி வந்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார்.

கவுண்டமணி– செந்தில் காம்போ:

அதிலும் கவுண்டமணி– செந்தில் காம்போ எல்லாம் வேற லெவல். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி படங்கள் எல்லாம் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. காலங்கள் மாற மாற இவர்களுடைய பயணமும் மாறிவிட்டது. இருந்தாலும் இப்போது வரை தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி –செந்தில் காம்போவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் 2016ஆம் ஆண்டில் வெளியான “வாய்மை” என்ற படத்திற்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

மீண்டும் சினிமாவில் கவுண்டமணி :

கவுண்டமணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக சினிமாவில் களமிறங்கி விட்டார். இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் “பழனிசாமி வாத்தியார்” என்ற திரைப்படத்தில் தற்போது கவுண்டமணி நடிக்க உள்ளார். இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் இப்படத்தில் காமெடி கிங் கவுண்டமணியுடன் தற்போது பிரபல காமெடியனாக வலம் வரும் யோகி பாபு நடிக்கயுள்ளார். மேலும் இப்படத்திற்கு நடிகர் ஜீவா நடித்த முகமூடி படத்தில் இசையமைத்த கே இசையமைக்கிறார்.

மதுரை செல்வம் அளித்த பேட்டி:

சமீபத்தில் தான் படத்திற்கான பூஜை நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கவுண்டமணியின் நெருங்கிய நண்பருமான மதுரை செல்வம் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், கவுண்டமணி சாரை தேடி நிறைய கதைகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், அவருக்கு அதை பிடிக்காமல் போனதால் தான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நேரத்தில் தான் பழனி சாமி வாத்தியார் கதையை அவர் கேட்டார். உடனே அந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்து கொண்டார். மேலும், கவுண்டமணிக்கு ஜோடியாக சஞ்சனா சேர்ந்து நடிக்கிறார்.

படம் குறித்து சொன்னது:

இந்த படத்தில் 11 தயாரிப்பாளர்கள் நடிக்கின்றார்கள். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இன்னும் சில வாரங்களில் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் முழுக்க முழுக்க சென்னையில் எடுக்கப்படுகிறது. படத்தின் கதை கவுண்டமணி சாரை அதிகமாக கவர்ந்திருக்கிறது. படத்தில் அவர் கழுதை மேய்ப்பவராக வருகிறார். 35 கழுதைகளை படத்தில் பயன்படுத்துகிறோம். படம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full