ஒரே செகண்ட் தான் சிரிச்சேன் டோட்டல் சீனும் டெலிடட் - மாஸ்டர் டெலீடட் வீடியோவால் மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய கௌரி கிஷன்

By Rajkumar · 7/2/2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

https://twitter.com/UW5tBZhsJNxALu7/status/1358379872008032259

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாளவிகா மோகனை மீம்களை போட்டு பங்கம் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

ஆனால், தன்னை பற்றி வந்த மீம்களை பார்த்து சிரித்து சிரித்து வயிறே வலித்துவிட்டது என்று கூறி இருந்தார் மாளவிகா. அதே போல இந்த படத்தில் நடித்த தீனா, சாந்தனு என்று பலரையும் மீம் போட்டு கலாய்த்து இருந்தனர்.இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடித்த கௌரி கிஷனும் தற்போது மீம் கிரியேட்டர்களிடம் சிக்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணமே நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் டெலீடட் வீடியோ தான்.

https://twitter.com/Jeni_Viji/status/1358341253889482752

இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும். அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.

https://twitter.com/ItsGurubaai/status/1358289844506558464

விஜய் இப்படி சீரியஸாக பேசிக்கொண்டு இருக்கும் போது கௌரி கிஷன் ஒரு காட்சியில் சிரித்துவிட்டார் அது தெல்லத் தெளிவாக தெரிய தான் இந்த காட்சியை லோகேஷ் நீக்கிவிட்டார் என்று பலர் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் கௌரி கிஷனை மீம் போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full