உருவத்தை கேலி செய்வது எல்லாம் ஒரு கேள்வியா? - அதிரடியாக கௌரி கிஷன் வெளியிட்ட அறிக்கை

By subhashini · 8/11/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் தான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கிறார். மேலும், இந்த படத்திற்கான ப்ரோமோஷனின் போது செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் படக்குழுவினருடன் நடிகை கௌரி கிஷன் கலந்து கொண்டிருந்தார்.

https://www.youtube.com/watch?v=nV7PG5oaF7M

அப்போது செய்தியாளர் ஹீரோவிடம், கௌரி கிஷனை தூக்கிறீர்களே, அவருடைய வெயிட் எவ்வளவு இருந்தது? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதை கேட்டு கோபப்பட்ட கௌரி கிஷன், என்னுடைய உடல் எடையை தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஒருவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவதெல்லாம் கேள்வியா? நான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதை குறித்து கேளுங்கள். இங்க நான் மட்டுமே தான் பெண். இப்படி பாடி ஷேமிங் செய்வது, அவமானப்படுத்துவதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கௌரி கிஷன் பேட்டி:

ஒரு நடிகையினுடைய உடல் எடையை தெரிந்து கொள்வது அநாகரிகமானது. இதெல்லாம் ஒரு கேள்வியா? என்னைப் பற்றி stupid தனமாக கேட்ட கேள்விக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் கேட்டிருந்தார். இதனால் பத்திரிகையாளருக்கும் கௌரி கிஷனுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது தொடர்ந்து பலரும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கௌரி கிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், இந்த வாரம் எனக்கும் youtuberக்கும் இடையே எதிர்பாராத விதமாக கடுமையான உரையாடல் நடந்தது.

https://www.youtube.com/watch?v=b5hMvStsCeg

கௌரி கிஷன் அறிக்கை:

அதன் பின்னணியில் ஒரு பெரிய பிரச்சனையை ஒப்புக்கொள்வது முக்கியம் என்று நினைக்கிறேன். அதன் மூலம் கலைஞர்களுக்கும் ஊடகங்களுக்கும் இடையே எத்தகைய உறவை ஊக்குவிக்க விரும்புகிறோம் என்பதையும் நாம் அனைவரும் சேர்ந்து சிந்திக்க முடியும். விமர்சனம் ஒரு பகுதி என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால், ஒருவருடைய உடல் மற்றும் தோற்றத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்துக்கள் அல்லது கேள்விகள் எந்த சூழலிலும் தவறானவை. நான் நடித்த படத்தை பற்றிய கேள்விகளை கேட்டிருக்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Gouri G Kishan (@gourigkofficial)

ஆதரவுக்கு நன்றி:

அதே ஆக்ரோஷமான தோணியில் ஒரு ஆண் நடிகரிடம் இதே கேள்வியை கேட்பார்களா? கஷ்டமான சூழ்நிலை என்னுடைய நிலைப்பாட்டில் நான் உறுதியாக நின்றதற்காக பெருமைப்படுகிறேன். இது எனக்கு மட்டும் இல்லை இதே போன்ற அனுபவத்தை எதிர்கொண்ட எல்லோருக்கும் முக்கியமானது. இது புதிதல்ல. ஆனால், இது இன்னும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. நமது சவாரியத்தை வெளிப்படுத்த, தவறு செய்யப்பட்டால் கேள்வி கேட்க அனுமதிக்கப்பட்டுள்ளோம்.
எனக்கு தந்த அனைத்து ஆதரவுக்கும் நன்றி. சென்னை பிரஸ் கிளப், அம்மா சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவற்றின் அறிக்கைகளுக்கு நன்றி. ஊடகங்கள் , பத்திரிகைகள், பொதுமக்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி, நண்பர்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full