எனக்கு ஹிட் கிடைச்சு ரொம்ப நாள் ஆச்சு, ஆனால் - மனம் திறந்து '96' பட நடிகை கெளரி கிஷன் சொன்ன விஷயம்

By subhashini · 5/11/2025

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கௌரி கிஷன்.
96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஆரம்பத்தில் படங்களில் குணச்சித்திர தான் நடித்து வந்தார். தற்போது இவர் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கிறார். 96 படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி, துணை நடிகை என்று கௌரி பட்டைய கிளப்பு இருந்தார்.

இந்த ஒரு படத்திலேயே இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து இவர் 96-2, LIK என படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். தற்போது இவருடைய நடிப்பில் தமிழில் உருவாகி இருக்கும் படம் அதர்ஸ். இந்த படம் இந்த வாரமே திரைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கௌரி கிஷன் குறித்த தகவல்:

அந்த வகையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் கௌரி கிஷன், அதர்ஸ் படம் ரொம்ப நல்லா வந்திருக்கிறது. நம்பிக்கையுடன் ரிலீசுக்கு காத்திருக்கிறோம். இந்த படம் மெடிக்கல் கிரைம் திரில்லர்
ஜானரில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் என்டர்டைனிங்காக சினிமாக்கான சில விஷயங்களை சேர்த்து இயக்குனர் எடுத்திருக்கிறார். காரணம், இந்த மாதிரியான மெடிக்கல் திரில்லர் சில நேரம் ஆவணப்படம் மாதிரி ஆகிவிடும். இங்கு இயக்குனர் சரியாக அனைத்தையும் பேலன்ஸ் செய்திருக்கிறார். எங்க தாத்தாவும் டாக்டர் என்பதால் எனக்கு மருத்துவத் துறை ரொம்ப பிடிக்கும்.

கௌரி கிஷன் பேட்டி:

கொரோனா சமயத்தில் என்னிடம் கல்லூரி மாணவர்கள் ஒரு மியூசிக் வீடியோவிற்காக கேட்டார்கள். அந்த ஐடியா எனக்கு பிடித்திருந்தது. அதை செய்தேன். மறுபடியும் ஒரு பெரிய படம், சின்ன படம் என்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கணும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். அப்படி என்னை நான் தொடர்ந்து சர்ப்ரைஸ் செய்து கொண்டிருக்கிறேன். ஆறு மாதம் வீட்டில் சும்மா இருந்தாலும் நான் ரெஸ்ட் எடுக்க மாட்டேன். உண்மையை சொல்லனும்னா எனக்கு ஹிட் கிடைத்து சில நாட்கள் ஆகிவிட்டது. 96-2 ரொம்ப எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தை தெலுங்கில் ரீமேக் பண்ணும் போது ஏன் சார்? அது கல்ட் திரைப்படம் என்று சொன்னேன்.

https://www.youtube.com/watch?v=N9Aw-XLM8QA

சினிமா பற்றி சொன்னது:

என்னைக் கேட்டால் நான் அதை தொட வேண்டாம் என்று தான் சொல்வேன். ஆனால், அது பிரேம்குமார் சாரோட விஷன். மெய்யழகன் தான் என்னை சமீபத்தில் அழ வைத்த படம். lik படம் விக்னேஷ் சிவன் சாருடைய கனவு. அந்த படத்தினுடைய கதையை எழுதிடலாம். ஆனால், அதை படமாக்குவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுவும் இளம் நடிகர்களை வைத்து எடுப்பது பெரிய விஷயம். நான் சில காட்சிகள் பார்த்தேன். இந்திய சினிமா மாதிரி இல்லை, வேறு லெவல்ல வந்திருக்கிறது. இதுவரைக்கும் நான் செய்த கதாபாத்திரங்களில் ரொம்பவே மாறுபட்டது. அதனுடைய ரிலீஸ்க்கு காத்திருக்கிறேன் என்று பல விஷயங்களை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full