புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யாருன்னு தெரிகிறதா.! முடிஞ்சா கண்டுபுடிங்க.!

By Rajkumar · 28/8/2019

சினிமாவில் உள்ள பல்வேறு நட்சத்திர தம்பதிகளில் வாரிசுகள் சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக புகைப்படத்தில் இருக்கும் இந்த நடிகையும் ஒரு பிரபலமான நட்சத்திர தம்பதிகளின் குழந்தை தான்.

தமிழ் சினிமாவில் விரல் நடிகரின் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த நடிகை. அதன் பின்னர் தமிழில் கோரமான படங்களை எடுக்கும் பிரபல இயக்குனரின் படத்தில் ஒரு கலைக்கூத்தாடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் கதாநாயகியாக வாய்ப்பு வரவில்லை என்றாலும் அம்மணியின் முகம் வில்லி கதாபாத்திரத்திற்கு செட் ஆகிவிட்டது.

அதிலும் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து படங்களும் வாரிசு நடிகர்கள் நடித்த படம்தான் என்பதும் ஒரு முக்கிய ஹைலைட். இறுதியாக இவர் காதலித்ததாக கூறப்பட்ட நடிகரின் படத்திலேயே வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் .அந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன தமிழ் சினிமாவின் கன் இயக்குனர் இவருக்கு வில்லி கதாபாத்திரத்தில் ஒரு முக்கிய நடிகரின் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

ஆரம்ப காலத்தில் கொஞ்சம் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த இந்த வாரிசு நடிகை எடையில் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார். தற்போது உடல் எடையை குறைக்க கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் மேலும் இந்த ஆண்டு மட்டும் அம்மணி கையில் 10 படங்கள் கைவசம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Tamil Behind Talkies AMP · Quick view
View full