பிறந்து இரண்டு வாரத்தில் இறந்த மூத்த மகள், தற்போது நெடு நெடுவென வளர்ந்துவிட்ட இரண்டாம் மகள் - கின்னஸ் பக்ருவின் அழகிய குடும்பம்.

By Arun · 11/11/2021

தமிழில் ஜீவா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'டிஷ்யூம்' திரைப்படத்தில் அமிதாப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் மலையாள நடிகர் பக்ரு. குள்ள நடிகர்களை தமிழ் சினிமா கொஞ்சம் மறந்திருந்த நிலையில் அவர்களை மீண்டும் நினைவுபடுத்தியவர் நடிகர் பக்ரு தான். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞ்சராக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் டிஷ்யூம், அற்புத தீவு, காவலன், 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனரகாவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார் பக்ரு. இவரது உண்மையான பெயர் அஜய் குமார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : படத்துல வெறும் மட்டம் தட்றதுக்காகவே ஒரு கேரக்டர் - ஜெய் பீம் குறித்து புதிய சர்ச்சையை கிளப்பிய ரங்கராஜ் பாண்டே.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்து 2 வாரத்திலேயே இறந்துவிட்டது. அதன் பின்னர் இவருக்கு 2009 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அவரது பெயர் தீப்தா கீர்த்தி. தனது இரண்டாவது மகள் குறித்து ஒரு பேட்டியில் இருந்த பக்ரு, ஏழு வயசு வரை என்னை அண்ணன்னுதான் நினைச்சுகிட்டிருந்தா.

ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்பல்லாம் என்னால சைக்கிள், பைக் ஓட்ட முடியலையேங்கிற கவலையை எனக்கு டிரைவரா இருந்து என் ஃப்ரெண்ட்ஸ்தான் நிவர்த்தி செய்வாங்க. இப்போ என் மகள் தான் என் சைக்கிள் ட்ரைவர். எனக்கு வந்த குறை என் மகளுக்கு இல்லை என்பதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full