விஜயகாந்த் இறப்புக்கு வடிவேலு போகாததற்கு காரணம் இதுதான் - உண்மையை உடைத்த ஹார்ட் பீட் நடிகர்

By subhashini · 21/11/2025

சமீப காலமாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வெப் தொடரில் ஒன்று தான் ஹார்ட் பீட். இந்த தொடர் இரண்டு சீசன்களை முடிவடைந்து இருக்கிறது. மூன்றாவது சீசனும் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த தொடரில் ரவி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குரு லக்ஷ்மணன். அதற்கு முன்பே இவர் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. பின் பகத் பாஸில், வடிவேலு நடித்த மாரீசன் படத்தில் குமார் என்ற ரோலில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இவர் லவ் ரிட்டன் உட்பட சில படங்களில் கமிட்டாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் வடிவேலு- விஜயகாந்த் பற்றி நடிகர் குரு லக்ஷ்மணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், மாரீசன் படத்தில் வடிவேலு சாருடன் இணைந்து நடித்திருந்தேன்.

குரு லக்ஷ்மணன் குறித்த தகவல்:

அதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. முதலில் என்னிடம் சொல்லும் போது வடிவேல் சாருடன் காட்சி இருப்பதைப் பற்றி சொல்லவில்லை. ஷூட்டிங்கில் தான் வடிவேலு சாரும் நானும் சேர்ந்து நடிப்பது தெரியும். அதற்கு பின் நாங்கள் இருவரும் ரொம்ப நேரம் பேசி இருந்தோம். நான் மதுரைக்காரன் என்று தெரிந்தவுடன் வடிவேல் சார் நிறைய விஷயங்களை பகிர்ந்தார். அவருடைய சினிமா அனுபவங்களை எல்லாம் சொல்லி இருந்தார்.

குரு லக்ஷ்மணன் பேட்டி:

அந்த சமயத்துல தான் விஜயகாந்த் சார் இறந்த செய்தி எல்லாம் வந்த நேரம். வடிவேலு சார் கொஞ்ச நேரம் அப்படியே அமைதியாகிவிட்டார். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் வடிவேலு சார், நல்ல மனுஷன். அவருடைய சாவுக்கு போய் இருக்கணும். ஆனால், என்னால் போக முடியவில்லை. நான் போய் இருந்தாலும் குறை சொல்லி இருப்பார்கள். போகாமல் இருந்தாலும் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

https://www.youtube.com/watch?v=MAm9zHMxC3s

வடிவேலு-விஜயகாந்த் பற்றி சொன்னது:

ஆயிரம் இருந்தாலும் அந்த மனுஷன் சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அவர் விஜயகாந்தை பற்றி திட்டி பேசி இருந்ததால் தான் அவரால் போக முடியவில்லை. கடைசி ஊர்வலத்திற்கு போக முடியவில்லை என்று அவருக்குமே ஒரு கஷ்டம் இருக்கு. விஜயகாந்த் பற்றி அவர் நிறைய உயர்வாகத்தான் நினைத்து இருக்கிறார். இருவரும் நண்பர்கள் தான். அதனால் தான் அவர் அவருடைய இறப்பை பற்றி நினைத்து ரொம்ப வருத்தப்பட்டார் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full