கடவுள கூட தான் அவன் இவன்னு சொல்லுறோம் - மிஸ்கினுக்கு ஆதரவாக குரு சோமசுந்தரம் சொன்னது

By subhashini · 23/1/2025

மிஸ்கினுக்கு ஆதரவாக நடிகர் குரு சோமசுந்தரம் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் மிஸ்கினின் சர்ச்சை பேச்சு தான் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் வித்யாசமான படங்களை கொடுப்பதில் கை தேர்ந்தவர் மிஸ்கின். இவர் திரைப்பட இயக்குநர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். தற்போது மிஸ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இவர் சமீபகாலமாக மேடைகளில் பேசுவது சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பாட்டில் ராதா. இந்த படத்தை தினகரன் சிவகலிங்கம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவில் மிஸ்கின், மது அருந்துவது என்பது ஒரு நிலை.

மிஸ்கின் பேச்சு:

மன வருத்தம் அதிகமாக உள்ளவர்கள் குடிப்பார்கள். அதற்குப்பின் அமைதியாகி விடுவார்கள். இங்கு உள்ளவர்கள் பெரும் குடிகாரர்கள் தான். இயக்குனர் குரோசாவா எனக்கு மிகப்பெரிய போதை. அதைவிட இளையராஜா என்ற ஒருத்தன் இருக்கான். அவன் தான் எனக்கு மிகப்பெரிய போதை என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இளையராஜா குறித்து மிஸ்கின் பேசி இருக்கும் விஷயம் தான் இணையத்தில் சர்ச்சையாகி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=Zjleo2i8FUA

மிஸ்கின் மீது கண்டனம்:

சோசியல் மீடியால் பலருமே மேடை நாகரீகம் இல்லாமல் மிஸ்கின் பேசி இருப்பது ரொம்ப தவறு என்று அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான அருள்தாஸ் பட விழாவில் மிஸ்கினை வெளுத்து வாங்கி இருந்தார். இந்த நிலையில் மிஸ்கினுக்கு ஆதரவாக நடிகர் குரு சோமசுந்தரம் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குரு சோமசுந்தரம் பேட்டி:

மணிகண்டன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருக்கிறார். இந்த படம் நாளை வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் குரு சோமசுந்தரம், மிஸ்கின் உடைய பேச்சை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன். அதில் தவறும் இருக்கிறது. இன்னொன்று உயர்ந்த விஷயங்களை அதாவது கடவுள் போன்றவர்களை நாம் அவன் இவன் தான் என்கிறோம்.

https://www.youtube.com/watch?v=QSBUM5ULMmE

மிஸ்கினுக்கு ஆதரவு:

என்னடா இப்படி என்ன படுத்துற என்றெல்லாம் நாம் சாமியை சொல்லுவோம். அதேபோல் தான் இளையராஜா ஜீனியஸ்க்கு எல்லாம் ஜீனியஸ். அவர் மரியாதை எல்லாம் தாண்டியவர். கடவுளுக்கு நிகராக பலபேர் பார்க்கிறார்கள். அதனால் மிஸ்கின் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான் சப்போர்ட் செய்யவில்லை. சில சமயங்களில் நாம் ரொம்ப வேலையை பயங்கரமாக பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னடா இப்படி பண்ணிட்டியே டா என்றெல்லாம் சொல்வோம். அந்த நேரத்தில் சொல்லும் வார்த்தை மரியாதை குறைவானது எல்லாம் கிடையாது. அதுபோலத்தான் இதையும் நான் பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full